“தென் வொய் யூ க்ளோஸ்ட் மை மவுத்?” ( முறுக்கு வேணாம்னா எதுக்கு என் வாயை பொத்துனீங்க?)
“ஒன்னு உட்கார்ந்து தின்னு, இல்லை படுத்திரு… படுத்துட்டே சாப்பிட்டா தொண்டையில மாட்டிக்காதா?”
“ம்ம் மாட்டிக்காது அத்தான்” எனும் போதே சிரசில் அடிக்க (புரையேற) எழுந்து அமர்ந்து இரும ஆரம்பித்தான். என்னமோ ஏதோவென பதறிக் கொண்டு வந்தவள் மீது இருந்த கடுப்பில் ஆனந்த் பிரசன்னாவை கொஞ்சம் வேகமாகத்தான் தட்டி சமநிலைக்கு கொண்டு வந்தான்.
தம்பியின் முதுகை நீவி விட்டவள் உச்சியில் ஊதினாள். “மேல பாருடா மேல பாருடா” என அவனது தலையை நிமிர்த்தினாள். அவன் நிதானமடையும் வரை அவள் நிதானத்தில் இல்லை. ஏறத்தாழ கண்கலங்கி நின்றவளின் அந்த பாசம் அவனை என்னமோ செய்தது.
கொஞ்சம் இலகுவானதும், “நவ் ஐயாம் குட் கா, அத்தான் வொய் யூ பேட் மி லைக் தேட்… இட்ஸ் பெயினிங்க்” (எதுக்குத்தான் அப்படி வேகமா தட்டுனீங்க, வலிக்குது) என்றான்.
‘ஆஹா அக்காகாரி கிட்ட பிடிச்சுக் கொடுத்திட்டானய்யா’ என எண்ணியவன் சம்பூர்ணா அவனை பார்ப்பதை கண்டுக்கொள்ளாதது போல அங்கிருந்து நகர்ந்தான்.
அடுத்த இரண்டு நாட்களில் ஆனந்தின் புதுமனை புகுவிழா இருக்க, பரபரப்பானார்கள்.
எல்லா வேலையும் கணேசனும், சம்பூர்ணாவும் இழுத்துப் போட்டு பார்க்க தன்னால் முடிந்தவரையில் தெரிந்த வரையில் ஆனந்தும் அவன் தகப்பனாரும் தயாரிப்புகளை ஒழுங்கு படுத்தினர்.

