Epi 15_ Manam Virumbudhe unnai unnai_Jansi

முத்துராஜ் எல்லாவற்றிலும் சம்பூர்ணாவை முன்னிருத்தியே செய்தார். வருகை தந்திருந்த பெண்ணொருவர் சம்பூர்ணாவிடம்,

“எல்லாமும் நீயே செய்யற…பார்க்கிறவங்க உன் வீட்டு விழான்னு நினைச்சுக்க போறாங்க பொண்ணே?” எனவும்,

“அவ எங்க வீட்டு பொண்ணு தானேம்மா… இது அவ வீடும் தான்” என முத்துராஜ் பேச்சை முடித்து வைத்தார்.

மதிய உணவுடன் விழா இனிதே நிறைவடைந்தது. வீட்டை பார்த்தவர்கள் அதன் அமைப்பை சிலாகித்துக் கொண்டு இருந்தனர்.

தனது நண்பர்களை அழைத்திருந்த பிரசன்னா ஒவ்வொரு சுவற்றிலும் சாய்ந்து குனிந்து நிமிர்ந்து செல்ஃபிக்களை கிளிக்கிக் கொண்டு இருந்தான். ஆனந்த் தனது கேமராவில் நிகழ்வுகள் அத்தனையையும் அடக்கிக் கொண்டு இருந்தான்.

வீடியோ காலில் அழைத்த விகாஷ் வீட்டையும் விழாவையும் பார்வையிட வாழ்த்துகள் சொன்னான். சம்பூர்ணாவும் அவனுடன் சில வார்த்தைகள் பேசினாலும் வீடியோ கால் எனவும் அவளுக்குள் இன்னமும் சில தடுமாற்றங்கள் தான்.

எல்லாமும் நன்றாகத்தான் இருந்தன… ஆனந்த் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப முத்துராஜ் மகன் வீட்டில் இரவு தங்கினாலும் இருவருக்கும் சாப்பாடெல்லாம் நண்பன் வீட்டில் தான்.

சம்பூர்ணா அவனை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டாள், முன்பை விட மிக நன்றாக பேசினாள். எனினும் அவனுக்கு அது போதவில்லை, மனதிற்குள்ளாக ஏதோ நிரடிக் கொண்டு இருந்தது.

எல்லாமும் ஒரு நாள் அதுவும் சம்பூர்ணாவை பெண் பார்க்க வந்தவர்கள் சென்ற
பின்னே அதற்கு அடுத்த நாள் வெடித்தது.

“அப்பா பாப்புவை எனக்கு கட்டிக் கொடுப்பாங்களான்னு மாமா கிட்ட
கேட்டுச் சொல்லுறீங்களா?” என அவன் கேட்டு நின்றான்.

தொடரும்

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!