Epi 20_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“ஏம்ல உனக்கு வயசு கூடுதா இல்ல குறையுதா?” முத்துராஜ் சத்தம் போட சம்பூர்ணா சிரிப்பை அடக்கிக் கொள்ள திணறினாள். ‘உன்னை அப்புறம் பார்த்துக்கிறேன்’ என்பதாக பாப்புவை பார்த்து வைத்தவன்,

“அப்பா இது பாப்புவுக்காகத்தான் அவ சொன்னதை தான் சொல்லுறேன்’

“என்னவாம்?”

“அவளுக்கு நாலு மாசம் வேலை பார்த்தே ஆகணுமாம், அப்படி ஏதோ கண்டிசன்ல வேலைக்கு சேர்ந்திருக்காளாமாம்.”

“அதுக்கு பதிலா பணம் எதுவும் கொடுத்தா முடியாதாமா?”

“கேட்டு பார்த்துட்டேன்,முடியாதாமாம். அப்புறமா பிரசன்னா படிப்புக்காகவும் யோசிக்கிறா”

“அதை நான் பார்த்துக்கிறேன் மா, என்னம்மா இதெல்லாம்?” கணேசன் கண்டிப்பாக மகளை பார்க்க சம்பூர்ணா தலையை குனிந்துக் கொண்டாள்.

“சரி தம்பி, ஆறு மாசம் கழிச்சே கல்யாணம் ஆகுதுன்னே வச்சுப்போம். அப்பவும் கூட கல்யாணம் முடிஞ்சதும் பாப்பா உங்க கூட வர முடியாதுதானே? பாஸ்போர்ட், விசா இன்னும் என்னென்னவெல்லாம் இருக்கு சரியா?”

“ஆமாம்பா, கல்யாண சர்டிபிகேட் எல்லாம் காட்டி பாஸ்போர்ட்ல மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும், விசாவுக்கான வேலை இருக்கும். கொஞ்ச நாள் கழிச்சு தான் விசா கிடைக்கும்.”

“அப்புறமென்ன? இப்ப கல்யாணம் கட்டிக்க, உன் வேலை பொறுத்து இப்ப நீ திரும்ப வெளிநாட்டுக்கு போ, பாஸ்போர்ட் விசா எல்லாம் தயாரானதும் புள்ள வருவா. அதுவரைக்கும் அவ அவளோட வேலையை பார்க்குறது, பிரசன்னா படிப்பை பார்த்துக்கிறதுன்னு இருக்கட்டுமே?”

அப்பா சொன்னது சரியாக இருக்கவும் சம்பூர்ணாவின் முகத்தை பார்த்தான் இம்முறையும் அவள் தலையாட்டி வைக்க இவனுக்கு கடுப்பானது.

“பாப்பு நீ தான் சொல்லணும்”  அவள் பேசியே ஆக வேண்டும் என்பதாக ஒலித்த அவனுடைய கண்டிப்பான குரலில் சம்பூர்ணாவோ

“சரி மாமா நீங்க சொல்லுற படி இருக்கட்டும்” என்றவளாக அங்கிருந்து எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

அவளும் தான் ஒரு நாளைக்கு எத்தனை விஷயங்களை தான் எதிர்கொள்ளுவது? மூச்சடைப்பது போலிருக்க, உள்ளறைக்குச் சென்று தனது கையை தானே கிள்ளிப் பார்க்க, சற்றும் சொரணையே இல்லை. தனது உச்சந்தலையில் கொட்டிப் பார்க்க, கூடவே மற்றொரு கொட்டும் விழுந்து வைத்தது.

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!