“ஆனால், என் வேலை காரணமா நான் பெரும்பாலும் பிசியா இருக்கிறப்ப நான் உன்னோட அழைப்புக்கு பதில் தரலை, இல்லை மெசேஜீக்கு ரிப்ளை செய்யலைனு எல்லாம் நமக்குள்ள பிரச்சன வந்துரக் கூடாது அதனாலத்தான் இப்பவே சொல்லுறேன்.”
“…”
“முன்பும் என்னிக்குமே நான் உன்னை மறந்தது கிடையாது, நீ என்னோட மனைவி ஆன பின்ன நம்மோட உறவு இன்னுமே நெருங்குது இல்லையா? நிச்சயமா நான் உன்னை எந்த சூழ்நிலையிலும் எந்த விதத்திலும் புறக்கணிக்க மாட்டேன். நீயா அழைக்கிறப்ப பதிலளிக்க முடியாத சூழல்ல இருந்தாலும் கூட கொஞ்ச நேரத்திலயாவது நிச்சயமா அழைச்சு பேசுவேன்.”
“ம்ம்”
“என்னோட வேலை காரணமா நமக்குள்ள எந்த பிரச்சனையும் வந்திரக் கூடாதுங்கிறதுக்காகத்தான் சொல்ல வந்தேன்”
“ஒன்னும் பிரச்சனை இல்லை அத்தான், உங்களுக்கு வசதியா இருக்கிறப்ப பேசுங்க, மத்த நேரம் மெசேஜ் செஞ்சா கூட போதும்”
“நீ புரிஞ்சுக்குவன்னு எனக்கு தெரியும் பாப்பு, நன்றிமா”
“அச்சோ நன்றி எதுக்குத்தான்?”
“என்னை கட்டிக்க சம்மதம் சொன்னதுக்கும் சேர்த்து”
குறும்பாய் புன்னகைத்தவளிடம்,
“முன்ன போல சேட்டக்காரி ஆகிட்ட நீ, இப்ப உன் மைண்ட் வாய்ஸ் என்ன ஓடுது?”
“வேண்டாம் அத்தான் விட்டுருங்க”
“மரியாதையா சொல்லு”
“எனக்கு வாழ்க்கை கொடு பாப்புன்னு அத்தான் கேட்டதுக்கு அப்புறமும் மறுக்க முடியுமா? அதனாலத்தான்…”
“ஏ பாப்பு” வெட்கமும் சிரிப்புமாய் அவன் நிற்க அவள் ஓடிவிட்டிருந்தாள்.

