“யெஸ்டா.. உங்க அக்காவை நான் கட்டிக்கட்டுமா வித் யுவர் பர்மிசன்”
“ம்ம்” தலையசைத்து புன்னகைத்தான்.
“பர்மிசன் கிராண்டட் அத்தான்” (திருமணத்திற்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன் அத்தான்) அத்தனையாக அவன் முகத்தில் மலர்ச்சி.
“பட் ஐ வில் ஆல்சோ கம் வித் அக்கா” ஆனால், நானும் அக்கா கூடவே வருவேன் எனச் சொன்னவனை கணேசன் பதறிப் போய் பார்க்க,
“நீ இல்லாமலாடா? உன்னையும் சேர்த்துதான் அழைச்சுட்டு போவேன். அங்கேயே படிச்சுக்கோ” என்றான் ஆனந்த்
சட்டென சின்னவனுக்கு என்ன தோன்றியதோ, “நோ அத்தான் ஐ வில் நாட் கம், தென் அப்பா வில் பி அலோன்” என தந்தையை கட்டிக் கொண்டான்.
தொடரும்

