Epi 20_ Manam Virumbudhe unnai unnai_Jansi

சடாரென திரும்ப அத்தானைக் கண்டதும் வெட்கமும் சிரிப்புமாய் நின்றாள்.

“எனக்கு ஏச்சு வாங்கி கொடுக்கணும்னா அத்தன சந்தோசம், சிரிக்கிற நீ?” அவள் கன்னத்தை வலிக்கக் கிள்ளினான்.

“அத்தான் வலிக்குது” கையை தட்டி விட்டவளுக்கு மாமா ஆனந்தை திட்டியது நினைவுக்கு வரவும் மறுபடியும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

“அடுத்த வாரமே நமக்கு கல்யாணமாம்”

“ஆ” கண்கள் விரிய நின்றவளிடம்,

“அதுக்கப்புறம் ஒரு வாரம் தான் என்னால இங்க இருக்க முடியும் பாப்பு… உனக்கு புரியுதா?”

“ம்ம்”

“இந்த முறைதான் முதன் முறையா நம்ம பிராண்ட் வேலையா நான் டிசைன் செய்யணும்”

“ம்ம் சொல்லி இருக்கீங்க”

“எல்லாமே எக்ஸ்க்ளூசிவ்வா இருக்கணும், ஒவ்வொரு டிசைனும் எங்க ப்ராண்ட் பெயரை அழுந்த பதிய வைக்குற விதமா இருக்கணும்”

“அதெல்லாம் நல்லா செய்வீங்க அத்தான்” வழக்கம் போல அவனுக்குண்டான ஊக்க வார்த்தைகளை அவள் உதிர்க்க, அவள் தலையை பிடித்து செல்லமாய் ஆட்டினான்.

“நான் சொல்ல வந்தது வேற”

“சொல்லுங்க”

“நான் செப்டம்பர் வரைக்கும் ரொம்ப பிசியா இருப்பேன், கல்யாணம் ரொம்ப பெரிய பொறுப்பு. தூரமா இருக்கியோ, இல்லை கிட்ட இருக்கியோ இனி நாம இரண்டு பேரும் மனசளவுல நெருக்கமா இருக்கணும்”

“…”

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!