அந்த வீட்டில் மகிழ்ச்சியும் பரபரப்பும் ஓடிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் அறியாத நம் பாப்பி அதாவது பிரசன்னா தனது ஒரு மூட்டை புத்தகச் சுமையோடு மாடியேறி வந்து காலிங்க் பெல் அடிக்க ஆனந்த் வந்து கதவை திறந்தான்.
“தேங்க்ஸ் அத்தான்” என்றவனாக லிவிங்க் ரூம் சென்று பையை ஒரு பக்கம் வீசினான். ஷீக்களை கழற்றி இரண்டு திக்கில் ஒவ்வொன்றாய் வீசி விட்டு சாக்ஸ்களை கழற்றி மூக்கருகே கொண்டு வந்து பார்த்து “யக்” என முகம் சுளித்து தனதருகே இருந்த கவுச்சில் போட்டு விட்டு, அங்கிருந்த ட்ராவரில் இருந்த தனது அலைபேசியை எடுத்து நோண்டிய வண்ணம் மல்லாந்து படுத்தான்.
“வாவ் சச் அ ரிலாக்சேசன்?” (ஆஹா என்னவொரு இலகு உணர்வு) என சாய்ந்து படுத்திருக்க,
“பிரசன்னா வா துணிய மாத்திட்டு சாப்பிட வா”
“ஐயாம் சோ டயர்ட்கா, கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ்” (களைப்பாக இருக்கிறேனக்கா, ஐந்து நிமிடங்கள் வேண்டும்”
“ஒன்லி ஃபைவ் மினிட்ஸ்” என்றவள் அவன் அருகே தனது அலைபேசியில் ஐந்து நிமிட அலாரத்தை வைத்து விட்டு அகன்றாள்.
கடுப்பாக அவளை பார்த்தவன் தனது மொபைல் நோண்டிங்க் படலத்தை வெகு அருமையாக தொடர்ந்தான்.
ஐந்து நிமிடத்தில் அக்காவின் அலைபேசி அலாரம் ஒலிக்க, “ம்ப்ச்ச்’ என்றவனாக எழுந்து தான் அங்கங்கே வீசியவற்றை முடிந்தவரைக்கும் ஒழுங்கு படுத்தி விட்டு துணியை மாற்ற சென்றான்.
முகம் கைகள் கால்கள் கழுவி, உணவு மேசையில் அமர்ந்து உண்டுக் கொண்டு இருக்கும் போது கணேசன் தனது அறையினின்று சாதாரணமான உடையில் வெளியில் வர,
“அக்கா, அப்பா டுக் ஆஃப் டுடே அஸ் வெல்” (அக்கா அப்பா இன்றைக்கும் விடுப்பா?)
“ம்ம்” என அப்பா இன்றும் லீவு எடுத்ததை தம்பிக்கு ஆமோதித்து சொன்னாள் சம்பூர்ணா.

