Epi 20_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“தென் ஐ வில் ஆல்சோ டேக் ஆஃப் டு ஸ்கூல் வென் மை ஃப்ரெண்ட் கம்ஸ் டு மீட் மீ”

என் நண்பன் வந்தால் நானும் அப்பாவை போல லீவெடுப்பேன் என தம்பி வீம்பாக அப்பாவுடன் போட்டிப் போட சம்பூர்ணா சிரிப்பை அடக்க முடியாமல் தப்பித்தாள்.

உணவருந்தி முன்னறைக்கு வந்தவன் முத்துராஜ் மாமா அருகே அமர்ந்தான்.

“மாமா ஷோ மீ யுவர் மொபைல்” (உங்கள் அலைபேசியை தாருங்கள் மாமா) அவரது பட்டன் போனை வாங்கி அதில் இருந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தான்.

“மாமா வொய் யூ ஆர் யூசிங்க் திஸ் பட்டன் போன்? டொய்ங்க் டொய்ங்க் டொய்ங்க் டொய்ங்க்” (மாமா எதற்காக இந்த அலைபேசியை உபயோகிக்கின்றீர்கள்?) என பட்டனின் சப்தத்தை குறிப்பிட,

“இந்த பட்டன் போன் மாமாக்கு போதும்டா, போன் செஞ்சா கேட்கணும் … பேசணும் அது போதாதா?”

“தென் டோண்ட் யூ ப்ளே கேம்ஸ்? கேம்ஸ் மாமா மொபைல் போன் கேம்ஸ்” (அப்படியென்றால் எப்படி அலைபேசி விளையாட்டுக்கள் விளையாடுவீர்கள்?)

“மாமா ப்ளே லைவ் கேம்… ஆன் த ஃபார்ம் யூ நோ?” தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தனக்கு பிடித்த நேரிடையான விளையாட்டு விவசாயம் தான்… தான் அதை மண்ணில் விளையாடுவேன் என்பதாகச் சொல்ல,

“இன்ட்ரெஸ்டிங்க் மாமா, ஒன் டே ஐ வில் கம் டு ஃபார்ம்”

ஒரு நாள் நான் நிச்சயமாக வயலுக்கு வருவேன் என பதில் சொன்னான்.

“அதென்னடா ஒன் டே நாளைக்கே நாம ஊருக்கு போறோம்”

“வொய் மாமா?” (ஏன் மாமா?)

“உன் அக்காக்கும் ஆனந்துக்கும் கல்யாணம் செய்ய போகணும்ல”

“வாட்? வென் திஸ் ஹாப்பண்ட்? நோ ஒன் ஆஸ்க்ட் மீ” என் கிட்ட கேட்காமல் எப்படி இது நிகழ்ந்தது என அதிர்ச்சி அடைந்தான்.

“அக்கா திஸ் இஸ் நாட் ஃபேர், யு டிண்ட் ஆஸ்க்ட் மீ” (அக்கா இது நியாயமில்லை… நீ என்னிடம் கேட்கவே இல்லை) கண்ணீரும் கம்பலையுமாக அக்காவிடம் நியாயம் கேட்க, 

“ஸாரிடா” (மன்னிச்சுக்கோ) அவன் தலையை வருடினாள் அக்கா.

“டே தம்பி பையா, நான் உன் கிட்ட கேட்காம கல்யாணத்துக்கு சரின்னு சொல்வேனா? … நான் அப்பா கிட்ட சொல்லிட்டு இருந்தேன். தம்பி பையா சரின்னு சொன்னாதான் கல்யாணம்னு…”

“இஸிஃட்?” (உண்மையாகவா?) அக்காவை நம்பாதவன் அத்தானை நம்பினான்.

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!