Epi 2_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“இனி எந்த ஊருக்கு போகணும் அத்தான்?”

“மும்பை இல்லை டெல்லி…. பார்ப்போம்”

உண்டுக் கொண்டே அவளை பெரிய மனுஷியாக மதித்து தனது எதிர்கால திட்டங்களை சொல்லச் சொல்ல, இவள் தலையசைத்து கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“என்ன படிக்க போறீங்க?”

“ஃபேஷன் டிசைனிங்க்”

“அப்படின்னா?”

“உடை வடிவமைப்பாளர்”

“ம்ம்”

“எனக்கு ரொம்ப பெரீய ஃபேஷன் டிசைனரா ஆகணும் பாப்பு.”

“அதெல்லாம் நீங்க சூப்பரா, பெரீய டிஜைனரா ஆகிருவீங்க அத்தான்.”

“எந்தங்கம்” அவள் முகத்தை வழித்து சொடக்கிட்டான் அவன்

காலிங்க் பெல் அடிக்கும் சத்தம் கேட்கவும் சம்பூர்ணா தனது கனவில் இருந்து நிஜத்திற்கு திரும்பினாள்

வீட்டின் வாயிலை அடைத்துக் கொண்டு புசுபுசுவென நின்றிருந்தான் பிரசன்னா. கதவை திறந்து விட்டவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

உடை மாற்றி உண்ண வேண்டி உணவு மேடைக்கு வந்தமரவும் அவள் அவனுக்காக பாலும் பிஸ்கிட்டும் கொண்டு வைத்தாள்.

“வெர் இஸ் பராத்தா?”

விசாரணை கமிசனை ஆரம்பித்தான் பிரசன்னா.

“சாயங்காலத்துக்கு பண்ணிருந்தேன், பொறு கொண்டு வரேன்.” அக்கா கொண்டு வைத்த பராட்டாக்களை கோபமின்றி உள்ளே தள்ளியவன் முகம் கொஞ்சம் தெளிவு பெறலாயிற்று.

“டிஃபன் வாஸ் டேஸ்ட்லெஸ், அப்புறம் எனக்கு கொரோனா தான் வந்துட்டு அதனால ருசி தெரியலைனு டேஸ்ட் பார்க்கத்தான் கேட்டேன். நவ் ஐயாம் டேம் சூர் தேட் ஐ டோன்ட் ஹேவ் கொரோனா… யோ யோ.”

பாலை தள்ளி வைத்து விட்டு ஜீஸை உள்ளே தள்ளி விட்டு டிவியை நோக்கி சென்றவன் டிவியை முடுக்கி விட்டு சத்தம் கூட்டினான். டிவி அலறத் தொடங்கியது.

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!