நாக்கு ருசி தெரிகிறதா என டேஸ்ட் பார்க்க பிரசன்னா உண்டு முடித்திருந்த ஐந்தாறு பராட்டாக்கள் போக மீதம் இருந்தவைகளை மூடி வைத்த சம்பூர்ணா. ‘தான் அதிகாலையில் கண்விழித்து சமைத்துக் கொடுத்த உணவு ருசிக்கவில்லையாமே?’ என திகைத்து ‘ஒருவேளை உண்ணாமல் மீதம் வைத்திருப்பானோ?’ என எண்ணியவளாக அந்த டிஃபன் பாக்ஸை திறந்து பார்க்க அது கழுவ தேவையில்லாத வண்ணம் வெகு சுத்தமாக ஒரு இணுக்கும் விடாமல் உண்டு காலியாக இருந்தது.
‘இவனுக்கு இருக்கிற கொழுப்பு இருக்கே?’ தம்பியை கோபிக்கவும் விடாமல் சிரிப்புதான் வந்து தொலைத்தது.
செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்தவள் முன்னறைக்கு வர அங்கே டிவி
அலறிக் கொண்டு இருக்க, மொபைல் ஒரு பக்கம் கிடக்க குறுக்கு மறுக்காக
கவுச்சில் தூங்கிக் கொண்டு இருந்தான் பிரசன்னா.
டிவியை அணைத்தால் பிரளயமே வெடிக்கும் என்பதால் அதன் சத்தத்தை மட்டும்
குறைத்தவள் அங்கிருந்த சில லைட்களை அணைத்து மிதமான வெளிச்சத்தை வைத்து அங்கிருந்து நகர்ந்தாள்.
தான் வேலைக்காக முயன்றுக் கொண்டிருக்கும் ஓரிரு ஏஜென்சிகள் மற்றும் தனது நட்பு வட்டங்கள் எல்லாரிடமும் வேலைக்காக கேட்டுக் கொண்டிருக்க அவளுக்கு
தேவையானதை போல வாய்ப்புகளை காணோம்.
“ம்ப்ச்ச்” சலித்தவாறு காலை நீட்டிக் கொண்டு கழுத்தை பின்னாக சாய்க்கவும்
அவளது அலைபேசியில் டிங்க், டிங்க் டிங்க் என சப்தங்களை எழுப்பியவாறு
செய்திகள் வந்துக் கொண்டிருக்க எழுந்து அமர்ந்தாள்.
அத்தனையும் இவள் சேமித்து வைக்காத அந்த ஆனந்த் முத்துராஜ் எனும் அலைபேசி எண்ணில் வந்து குவிந்து இருந்தன.
“பாப்பு, நீதான் என் வீட்டுக்கு இண்டீரியர் செய்யப் போற… ஓகே, இந்த மாடல்
எல்லாம் பார்த்துக்கோ. உனக்கேத்த மாதிரி கொஞ்சம் வேணும்னா மாத்திக்கோ.
ஆனால், அசத்தலா செஞ்சு தர ஓகேவா?” என பெருவிரல் உயர்த்தி வெற்றிக் குறி
காட்டி முடித்திருந்தான்.
அத்தனை புகைப்படங்களும், தானாகவே டவுன்லோட் ஆகி அவள் கண்களில் விரிய வாய் என்னமோ, “முடியாது போடா” என முனகியது.
தொடரும்


Leave a Reply