Epi 4_Manadhoram Unthan Ninaivugal

வழக்கம் போல மீரா தனது வேலைகளை தொடர்ந்தாள். ஆரம்பத்தில் அவன் மீது தவறான எண்ணங்கள் கொண்டு இருந்தாலும் கூட, தாம் ஹைதராபாதில் இருக்கின்ற நாட்களில் எதையும் காட்டிக் கொள்ளக் கூடாது என நினைத்திருந்தாலும் அவள் எண்ணியது போல நாட்கள் அமைதியாக கடக்கவில்லை.

கடந்த நாட்களில் கார்த்திக் இவளை, இவளது தினசரி நடவடிக்கைகளை கட்டுப்படுத்திய விதங்கள் அதீதமாக இருந்தன. மீராவிற்கு அவனது அடக்குமுறைகள் மூச்சு முட்டிப் போய் விட்ட நிலைதான்.

அவன் சொல்லி இவள் தயாரித்த டாகுமெண்டில் இதுவரைக்கும் ஐந்து திருத்தங்கள் சொல்லி விட்டிருந்தான். அதுவும் எப்படி?

முதலில் அ, ஆ படிக்கும் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கும் விதத்தில் தனக்கு அருகில் அமர வைத்து…ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி…. தன்னை அவனது மடிக் கணிணியில் திருத்தம் செய்ய வைத்து….அப்ப்பப்பா விட்டால் மீராவை மடியில் வைத்துக் கொள்வானோ? இப்படித்தான் ஆரம்பித்தது மீராவின் சோதனைக்காலம்.

பிடித்தம்

எரிச்சல் மூட்டும் 

உந்தன் ஆளுமைகள்

கோபப்படுத்தும் உந்தன் 

அதீத உரிமை பாராட்டல்கள்

ஆக்டோபஸாய் எனை வளைத்து

கரத்திற்குள் வைத்துக் கொள்ள முயலும் 

உந்தன் முயற்சிகள்

இவைகளில் ஒன்றும் 

எனக்கு பிடித்தமாயில்லை 

என்பது எவ்வளவு உண்மையோ

என் பிடித்தமின்மை உணர்ந்து

நீ விலகிச் செல்வதும்….

அந்நியமாய் நிற்பதுவும் கூட 

எனக்கு பிடித்தமில்லை என்று

என்றேனும் உணர்வாயா?

தீயாய் தகிக்காமல்

பனியாய் குளிராமல்

மிதமாய்க் காதல் செய்ய 

என்று கற்பாயடா நீ?

தொடரும்

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *