Epi 6_ Manam Virumbudhe unnai unnai_Jansi

‘டேய் அத்தான், நீ இன்னிக்கு செத்தான் டோய். என்ன நினைச்சுட்டு என் கணக்குக்கு இத்தனை பணத்தை அனுப்பி வச்ச? நீ பணக்காரன்னா அது உன்னோட அதுக்கும் எனக்கும் என்ன? பணம் காட்டினதும் பேசிருவேன்னு நினைச்சியோ? சத்தியமா பேச மாட்டேன். அதுவும் உன்னை மாதிரி ஆள் கிட்ட சத்தியமா பேச மாட்டேன் ச்சி ச்சீ ச்சி ச்சீ.’

என்னதான் அவள் அவனுடன் பேச விரும்பாவிட்டாலும் கூட அவனது எண்ணை எடுத்து அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனோ அவளுக்கு ஒரு தகவலும் அனுப்பவில்லை. ‘இதென்னடா வம்பாகப் போயிற்று?’ என அவளுக்கு தலைவலியாக இருந்தது. பொறுக்க முடியாமல் அவள் முதன் முறையாக அவனுக்கு தகவல் அனுப்பினாள்.

கடந்த ஆறு வருடங்களில் முதன் முறையாக அவனுக்கு அவள் “உங்க வங்கி கணக்கு விபரம் தாங்க, தெரியாமல் பணம் என் கணக்கில் வந்திருக்கு போலிருக்கு. உங்களுக்கு திரும்ப அனுப்பிடறேன்.” என தலை காலில்லாமல் தகவல் அனுப்பினாள்.

இவளது தகவலுக்காக காத்திருந்தவனை போல அவனும் கூட உடனே “பாப்பு வீட்டு வேலைக்காக அனுப்பின பணம் அது, அதனால் உன் கணக்கில் இருக்கட்டும்”

உடனடியாக தகவல் அனுப்பினான்.

“நான் வெறும் மேற்பார்வை மட்டும் தான் பார்க்க போகிறதா அப்பா சொன்னாங்க, அதுக்கெதுக்கு பணம்லாம்? வங்கி விபரம் தாங்க பணத்தை திரும்ப அனுப்பிடறேன்” என இங்கே சம்பூர்ணா “அம்மா வையும் காசு கொடு” என புலம்பவே ஆரம்பித்து இருந்தாள் எனலாம்.

“வேலை முடிஞ்சதும் பணத்தை திரும்ப வாங்கிக்கிறேன் பாப்பு… இப்போதைக்கு உன் கணக்கில இருக்கட்டும். இரவெல்லாம் வேலை முடித்து விட்டு இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். தூங்கப் போகிறேன் குட் டே” என்றவனாக அந்த பேச்சை அங்கேயே முடித்து வைத்தான். அதற்கு மேல் அவனுக்கு எத்தனை தகவல் அனுப்பியும் அவளுக்கு பதில் கிட்டவில்லை.

இப்போது இங்கே மதியம் மூன்று மணியென்றால் இத்தாலி மிலானில் நான்கரை மணி நேரங்கள் வித்தியாசம். காலை பதினொன்றரையா இப்போது? இரவு முழுக்க பணி புரிந்து வந்தவனை தொந்தரவு செய்யக் கூடாதுதான் என இவள் மனம் நியாய தர்மம் பேச அந்த விஷயத்தை அங்கேயே விட்டாள்.

சாயங்காலம் அப்பா வந்த போது அவரிடம் தனியாக பணம் குறித்துச் சொல்லவும், அவரோ மிக இயல்பாக “ஆமாம் சம்பூ, உன் வங்கி கணக்கு விபரங்களை ஆனந்த் தம்பியிடம் நான் தான் கொடுத்தேன்.” எனச் சொன்னார்.

“வாட் மணி அக்கா?” பின்னாக வந்து நின்றான் பாம்புக் காதன் பிரசன்னா.

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!