Epi 6_ Manam Virumbudhe unnai unnai_Jansi

‘அடப்பாவி இவனுக்கு தெரியக் கூடாதென்றல்லவா அப்பாவை தனியாக அழைத்து பேசினோம்?’ என மனம் பதறியவள்.

“நத்திங்டா பிரசன்னா… சாட் ஷாப்பிங்கு என்னிடம் பணம் இல்லையென்பதால் அப்பாவிடம் பணம் கேட்டேன்.”

“இல்லியேக்கா? யூ செட் சம் லாக்ஸ் மணி தெர் இன் யுவர் அக்கவுண்ட்?” உன் கணக்கில் இலட்சக்கணக்கில் பணம் இருப்பதாக அல்லவா கேள்விப் பட்டேன்? எனவும்

‘அடப்பாவி’ மனம் புழுங்கியவள் ‘இவனுக்கு பணம் இருப்பதென்று தெரிந்தாலே தினம் ஐஸ்கிரீமாக, சாக்லேட்டாக வாங்கி தின்று தீர்த்து விடுவானே? போயும் போயும் நான் பேசியது இவன் காதிலா விழ வேண்டும்?’ நொந்துக் கொண்டாள்.

“ஐ செட் இஃப்… தம்பி நோட் திஸ் பாய்ண்ட் இஃப் ஐ ஹேட் இனஃப் மணி இன் லாக்ஸ், ஐ வில் நாட் ஆஸ்க் மணி டு அப்பா, வீ கேன் கோ டு சாட் ஷாப்பிங்க் எவ்ரி டே… ஆம் ஐ ரைட்?” என தன் தம்பியிடம் அவள் சமாளித்துக் கொண்டிருக்க, மகனை நாள் முழுக்க கவனித்துக் கொள்ளும் சமாளிக்கும் மகளின் பேச்சின் நடுவே நுழைய அப்பா விரும்பவில்லை. தனது உடையை மாற்ற சென்றார்.

தன் வங்கி கணக்கில் போதுமான அளவு இலட்சக்கணக்கில் பணம் இருந்தால் அப்பாவிடம் பணம் கேட்காமல் நாம் தினம் தோறும் சாட் ஷாப்பிங்க் செல்லலாம் என அப்பாவிடம் பேசிக் கொண்டு இருந்ததாக அக்கா சொல்லவும் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் பிரசன்னா குழம்பினான்.

கூடுதலாக தனது உடை மாற்றி வந்த அப்பா மகளிடம் ஐநூறு ரூபாயை நீட்ட, அக்கா அப்பாவிடம் பணம் கேட்டதென்னமோ உண்மைதான் போல? எனும் முடிவிற்கு வந்து விட்டிருந்தான்.

அன்று அவர்கள் நன்றாக ஊர் சுற்றி வந்தனர். கோல் கப்பே, தஹி பல்லே, கச்சோரி, ஆலு டிக்கி, பக்கோடே, ரப்ரி ஃபாலுடா என பிடித்ததை எல்லாம் உண்டு உருண்டுக் கொண்டே வந்துதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

அப்பா மகள் சமைத்ததை எடுத்து வைத்து உண்டு உறங்கச் சென்று விட, நன்கு ஊர் சுற்றி வந்தவர்கள் களைத்துப் போய் உறங்கினர். அடுத்த நாள் பள்ளி விடுமுறை என்பதால் நல்லதொரு தூக்கம் அவர்களை அழுத்தி அரவணைத்துக் கொண்டது

தொடரும்

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!