Epi 8_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“ஏன் ஆனந்த் நீ கூட இந்தியாவில் ஏதோ வீடு கட்டி இருக்கின்றாயாம். என்னை எல்லாம் உன் வீட்டை பார்க்க அழைக்க மாட்டாயா என்ன?” எனக் கேட்க,

‘தான் சந்தேகப்பட்டது சரிதான்’ என எண்ணிக் கொண்ட விகாஷ் ஆனந்திடம் முணுமுணுத்தான்.

“இவங்களுக்கெல்லாம் விசா கொடுத்தது யாரப்பா?” 

“டேய் எப்பவும் குழுவா இருக்கிறப்ப, அதில் சிலருக்கு தெரியாத மொழி பேசறது தப்பு. உனக்கு அது கூடவா புரியலை?” ஆனந்த் கண்டித்தான்.

“உனக்குத்தான் இவ காலை சுத்தின பாம்புன்னு புரியலை, நான் உன்னை ஏதாவது சொன்னேனா என்ன?”

“ஏன்டா நீ வேற, அதெல்லாம் முடிஞ்சு போன கதைடா.”

இவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருக்க லிண்டா மறுபடியும், “நான் உன் வீட்டை பார்க்க வரலாமா?” என கேட்க ஆனந்த் சுதாரித்தான்.

“நிச்சயமாக லிண்டா, ஆல்ஃபீ நீங்கள் என் வீட்டிற்கு நிச்சயமாக வருகை தர வேண்டும்” ஆனந்த் அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

“சரி வா, வா ஃப்ளைட் வந்து விட்டது விகாஷ் சொல்ல விமானம் நோக்கி விரைந்தனர்.

டெல்லி, சம்பூர்ணாவின் இல்லத்தில்

“சம்பூ, இந்த புகைப்படத்தில் இருப்பவரை பாரம்மா இவர்கள் தான் நான் உனக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை. நாளை உன்னை பார்க்க வரவிருக்கின்றார்கள்.”

கணேசன் நீட்டிய புகைப்படத்தை சம்பூர்ணா பார்க்கும் முன்பாக இழுத்து பார்த்த பிரசன்னா உதட்டை பிதுக்கினான்.

“நாட் குட்” என்றவனாக அவள் கையில் புகைப்படத்தை திணித்துவிட்டு சென்று விட சம்பூர்ணா அந்த புகைப்படத்தை ஒரு முறை மேலோட்டமாக பார்த்து விட்டு உரையில் இட்டாள். தனது முகத்தையே பார்த்து நிற்பவரிடம்,

“எத்தனை மணிக்கு வர்றாங்கப்பா?” எனக் கேட்டாள்.

தொடரும்

Pages: 1 2 3 4 5

error: Content is protected !!