2.”வளி”யவள்_சிறுகதை_ஜான்சி

தனக்காக தாளிடப்படாமல் இருந்த கதவை திறந்து உள்ளே வந்து தாளிட்டான். வந்தது யாரென சமையலறையினின்று எட்டிப் பார்த்தவள் படுக்கையறையின் உள்ளே சென்றாள்.

‘திமிரைப் பாரு’ அவளை பின் தொடர்ந்தான்.

ஈரக் கைகளை துடைத்துக் கொண்டு இருந்தவள் முன்பு தன் சாந்தம் தொலைத்து உக்கிரமாய் நின்றான். 

“லலித்துக்கு என் நம்பர் ஏன் கொடுத்த?”

“அவன் கேட்டான், அதனாலக் கொடுத்தேன்.”

“அதெப்படி கொடுப்ப… உனக்கென்ன அவ்வளவு திமிர்?”

“அதெல்லாம் என் திமிர் உன்னை விட குறைச்சல்தான்.”

“கொழுப்பு உடம்பெல்லாம் கொழுப்பு”

சரேலென அவளை தன் புறம் இழுத்தவன் ஆக்டோபஸாய் நெருக்கி கட்டிக் கொண்டான். அவள் முகத்தை மட்டும் நிமிர்த்தியவன்,

“உன்னை கல்யாணம் கட்டிப்பானாமே?” தீக்கங்குகளாய் அவனது கண்கள் அவளை எரித்தன.

“அப்படி அவன் தானே சொன்னான்?”

“அதெப்படி அவன் அப்படிச் சொல்லலாம்?” உறுமினான்.

“அப்படி நான் சொன்னா ஏன்னு என் கிட்ட கேளு மஹி, எவன் எவன் சொன்னதுக்கெல்லாம் வந்து என் கிட்ட கணக்கு கேட்காத. நான் பேசினா என் புருசனே காது கொடுத்து கேட்க மாட்டான் நான் அந்த கடுப்பில இருக்கேன்.” பொரிந்தவளது குரல் சட்டென்று அவன் வாய்க்குள்ளாக தேய்ந்தது.

போராட விரும்புகின்றவள் தானே போராடுவாள் இவள் அவனுக்குள் அடைக்கலமாக துடித்துக் கொண்டு இருந்தவள் தானே? கிடைத்தது வாய்ப்பென்று அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக் கொண்டாள். அவனது நிலை இன்னும் மோசமானது.

உதடுகளை விடுவித்தவன் மறுபடி முனகினான்.

“அதெப்படி அவன் என் கிட்ட அப்படி கேட்கலாம்?”

“போடா போ… ஷராபி (குடிகாரன்) மாதிரி உளறாத…” கோபத்தில் வெடுவெடுத்தவளை மறுபடி இறுக்கிக் கொண்டான்.

அடுத்த மணித் துளிகளில் அவனது தாழ்வு மனப்பான்மை தாண்டி மனைவி மேல் இருந்த உரிமையுணர்வு வென்றிருந்தது. 

அவனுக்கு லலித் மீதிருந்த கோபங்கள் அர்த்தமற்றவை என அவன் கைகளுக்குள் இருக்கும் காதல் மனைவியின் அணைப்பு உணர்த்திய கணத்தினின்று தனது இயல்புக்கு மாறினான். புதிதாக எழுந்திருந்த தாபங்கள் அவனது கோபத்தை மீறி இருந்தன. மனைவியை கொண்டாடித் தீர்த்தான். 

இங்கே தாழ்வு மனப்பான்மை எனும் முள்ளை பொறாமை எனும் முள் எடுத்து எறிந்து விட்டிருந்தது.

வேர்த்து விறுவிறுத்துக் கிடந்தவளை மார்பிலிருந்து விலக்கி முகம் துடைத்தான். குனிந்து அவளுக்கு முத்தம் வைக்கப் போக அவள் வீஞ்சிக் கொண்டு முதுகுக் காட்டிப் படுத்தாள்.

“மன்னிச்சுக்கோ ஒரு மாதிரி ஜெலஸ் ஆகிட்டேன்.”

“யார் தப்பு?”

கலைந்த உடைகளை சரிப்படுத்திக் கொண்டு இருந்தவளை உன்மத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தவன்,

“இப்ப இல்லை எப்பவுமே என் தப்புத்தான்” என்க,

“ம்ம்… அஃது” மனம் விட்டுச் சிரித்தாள்.

மனதின் இறுக்கங்கள் அகல வளியானவளின் சிரிப்பை தன் கண்களில் நிறைத்துக் கொண்டான். இப்போது அவ்வளியானது அவனது இரத்த நாளங்களில் புது மலர்ச்சியை பரப்பிச் சென்றிருந்தது.

“வாங்க பசிக்குது” சுத்தம் செய்து உணவு மேடையில் சென்று அமர கணவனும் அருகில் வந்து அமர்ந்தான். 

அன்றைய உணவு பறிமாற்றம் உணர்வுகளின் பறிமாற்றங்களுமாகி விட யாமினியின் கனவுகளில் அன்று அவர்களின் சின்ன பிரதியான ஒரு குட்டிச் சிட்டு “தகதிமி, தகஜொனு” என ஜதி இசைத்துக் கொண்டு இருந்தது.

சுபம்

Pages: 1 2 3 4 5 6 7 8 9


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *