Epi 10_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 10_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 10

ஆனந்த் தனனை முறைத்துக் கொண்டு நிற்பதைக் கண்ட விகாஷ், “போடா இவனே தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.இத்தனை அழகான பொண்ணை உறவில வச்சுட்டு முரட்டு சிங்கிளா சுத்துற? நான் கட்டிக்கிறேன்னு சொன்னாலும் முறைக்கிற?”

“எங்க மாமா இந்த ஊருக்கு வந்தும் கூட வெட்டரிவா வீச்சருவா எல்லாம் வச்சிருக்காரு. அதெல்லாம் கதவுக்கு பின்னாடிதான் தொங்குது. நீ அவர் வீட்டு பொண்ணை கேட்டேன்னு சொல்லவும் உன் தலை தரையில உருண்டாலும் உருளும். என்னச் சொல்லுற?”

“எதுக்குடா என்னை பயமுறுத்துற? அழகை இரசிப்பது எல்லாம் ஒரு குற்றமா? போடா எனக்கு இப்ப பயம் பயமா வருதே? பொண்ணை பார்த்தா ஆசையா இருக்கு, அரிவாள நினைச்சா பயமா இருக்கு? எது வெல்லும்டா ஆனந்தா?” என கேட்கும் முன்னே வாயிலில் பெரிய மீசைக்காரர் தோன்றினார்.

“வாங்க தம்பிகளா… என்ன வாசலிலேயே நின்று விட்டீர்கள்?” என கேட்டு முன் சென்றார்.

“ஏ ஆனந்த் என்ன உங்க மாமா பழைய தமிழ் படத்தில் வருமே அது போல பேசுறார்டா” என்றான் விகாஷ்.

புன்னகைத்த வண்ணம் அவனை இழுத்து உள்ளே வந்தவன் இடுப்பை பிரசன்னா கட்டிக் கொண்டான்.

“அத்தான், ஐ வாஸ் ஈகர்லி வெயிட்டிங்க் ஃபார் யூ” (அத்தான் நான் உங்களை காண வெகு ஆவலாக காத்திருந்தேன்)

“டேய் பிரசன்னா, நீ ரொம்ப வளர்ந்திட்டடா” என அவனை தூக்கி பார்த்தான்.

“முடிலடா நீளத்தில மட்டும் இல்லை அகலத்திலயும் வளர்ந்திருக்க, தூக்கவே முடில போடா…” விளையாட்டாக அவனிடம் பேச,

“அக்கா போட்ட சோறு அத்தான்” சொல்லி சிரித்தான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!