வாயிலில் ஒன்றுமே சொல்லாவிட்டாலும், அறைக்கு உள்ளே வந்ததும் தான் இந்தரோடு ரிஷி கைக்குலுக்கிக் கொண்டான்.
“ஹாய் இந்தர், ஹவ் ஆர் யூ டூயிங்க்… லாங்க் டைம் நோ சீ…”
தோளில் இருந்தப் பையை கக்கத்தில் இடுக்கியவளாய் ரிஷா அவர்களைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள்.
அழகாய் குறுந்தாடியோடு இருந்தான் ரிஷி. பார்மலாய் உடை அணிந்திருந்தவனின் தோற்றம் வெகுவாய் கவர்வதாய் இருந்தது.
“யூ ப்ளீஸ் ஹேவ் யுவர் சீட் மேம்”, இந்தருடன் வந்த அழகான யுவதியை ரிஷி உபசரிக்க மறக்கவில்லை.
அவளோ முன் பின் தெரியாத அந்த இடத்தில் தயங்கியவளாக அமர்ந்தாள்.
இந்தரும் டேபிளுக்கு கீழான அந்த இடத்தில் அவளின் பெரிய பையை தள்ளி விட்டு ஆசுவாசமாய் ரோலிங்க் சேரில் அமர்ந்தான்.
பொதுவான சில விசாரிப்புகள், கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்த ஹோட்டலினின்று குளிர்பானம் தருவித்து கொடுத்தான்.
வழக்கமான உபச்சாரங்கள் நடந்து முடியவும் கேஸை கேட்க ஆர்வமானான்.
ரிஷா, “பாத் ரூமை உபயோகிக்கவா?” என அனுமதி கேட்டு முகம் கழுவி வந்ததும் கொஞ்சம் இலகுவாய் உணர்ந்தாள்.
இந்தரிடம் ஏற்கெனவே தன் வாழ்வின் நிகழ்வுகளை பகிர்ந்திருந்ததால் ரிஷியிடம் தன்னைப் பற்றிய விபரங்கள் கூறுவதற்கு அவளுக்கு அவ்வளவு சங்கோஜமாய் இல்லை.
முதலில் தன்னுடைய இந்த இக்கட்டான நிலைமையிலிருந்து தப்பி பிழைத்து, தாய் தந்தையை கான வேண்டும் எனும் ஒரே விஷயம் தான் இப்போது அவளை செலுத்திக் கொண்டிருந்தது எனலாம்.
ஆரம்பிக்கும் முன் ரிஷா தயங்கினாள். ரிஷி அவளிடம் அழகாய் முறுவலித்து, “என்ன ரிஷா? என்ன யோசனை?”
“அதொன்றுமில்லை, பொதுவாக டிடெக்டிவ்களுக்கு அசிஸ்டெண்ட் இருப்பார்களே? நோட்ஸ் எடுக்க…”, எனவும் ரிஷி சன்னமாய் சிரித்தான்.
“அதற்கெதற்கு அசிஸ்டெண்ட்? அதுதான் ரெகார்டர்கள் ஏராளம் வந்துவிட்டனவே?”
mp3 அளவில் இருந்த ஒரு கையடக்க கருவியை காண்பித்தான். உன் உரையாடல் இதில் பதிவாகிவிடும், நீ கவலைப் படாதே. மறுபடி முறுவலித்தான் அறையே பிரகாசித்து அடங்கியது.
தனக்குத் தெரிந்தவற்றை சொல்லிக் கொண்டு இருந்தாள், பல்வேறு கேள்விகள் அதற்கான பதில்கள் என மணித்துளிகள் கரைந்தன.
அவள் சொன்னவற்றில் இருந்து சில குறிப்புகளை டைரியில் குறித்துக் கொண்டிருந்தவன் இடை இடையே தீவிர சிந்தனையோடு தலையில் பேனாவை தட்டிக் கொண்டிருந்தான்
அந்த அறையில் இரண்டு ஆண்களோடு கூட இருந்தாலும் ஏனோ அவளுக்கு எந்த ஒரு பாதுகாப்பின்மை உணர்வும் வரவில்லை. மனதிற்குள்ளாக கண்ணியமான இருவரின் நடவடிக்கைகளை மெச்சிக் கொண்டாள்.
பாதி பேச்சில் இருக்கும் போதே இவர்களை துரத்திக் கொண்டு வந்த துப்பாக்கி சூழ் மனிதர்களை குறித்து அறிந்தவன் இங்கே எதுவும் பிரச்சனை இராது. ஆனாலும், பாதுகாப்பிற்காக உள்ளாக பூட்டிக் கொள்வோமே என அவர்களிடம்அனுமதிக் கேட்டு முன் கதவை பூட்டி வந்த பின்னர் அவனது கேள்வி பதில்கள் தொடர்ந்தன.
அத்தனையும் அவள் சொல்லி முடித்ததும், ரிஷி சிறிது நேரம் சிந்தித்தவாறு அமர்ந்திருந்தான். தன்னுடைய குறிப்புகளில் புரியாத விஷயங்கள் இருக்க அவற்றையும் அவளிடம் கேட்டு தெளிவுப் படுத்திக் கொண்டான்.


Leave a Reply