Epi 10_Thurathum Nizhalgal_Jansi

“சரி நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பார்ப்போம்” என்றான். ரிஷாவை நோக்கி,

“ம்ம்… முதலில் உன் பெற்றோர் எங்கே எனக் கண்டுப் பிடிக்க வேண்டும்.”

“ம்ம்…” தலையசைத்தாள் ரிஷா.

“கூடவே இப்போது உன்னை துரத்திக் கொண்டு இருப்பவர்களிடமிருந்து உன்னை முதலில் பாதுகாக்க வேண்டும்.”

“அதுதான் முதலில் செய்ய வேண்டியது ரிஷி”, இந்தர் முந்திக் கொண்டுச் சொன்னான்.

“முக்கியமானவை இரண்டுமே தான்”, பதிலளித்தான் ரிஷி.

“என்னால் மறக்கவே முடியாது ரிஷி, அந்த கூட்டமான இடத்திலும் எப்படித்தான் இவளை அடையாளம் கண்டு பிடிச்சி வந்தானுங்களோ? பாந்திரா அப்புறம் ஜூஹீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இவள் மயிரிழையில் தப்பினாள். பாந்திராவில் முதலில் துப்பாக்கிச் சூடு நடக்கும் போது  நானும் கூட என்னைத்தான் தேடுகிறான்கள் என நினைத்து இவளை ஏன் நடுவில் வாந்தாயென திட்டினேன்…” இந்தர் கூற, ரிஷா முறுவலித்தாள்.

“இந்தரை இன்று சந்தித்தது என் பெற்றோர் செய்த புண்ணியமாக இருக்க வேண்டும் ரிஷி. இல்லைனா நான் பாந்திராவிலேயே சமாதி ஆகி இருக்க வேண்டியது தான்…”

எனக் கூறியவளை நோக்கி இந்தர் புன்னகைத்தான், அவர்களுக்கிடையிலான நட்பும் கூடவே புன்னகைத்தது.

“சரி நான் உன் சென்னை வீடு மற்றும் கம்பெனியிலிருந்து தான் முதலில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும், அதுவரையிலும் உன் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனக்கு தெரிந்த செக்யூரிட்டி கார்ட்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என ரிஷாவிடம் கூறியவன்,

“இப்போது நாம் செய்ய வேண்டிய முதல் வேலை ரிஷாவை பாதுகாப்பாக ஏதாவது நல்ல ஹோட்டலில் தங்க வைப்பதுதான்…”, இந்தரிடம் சொன்னான்.

பேச்சினூடே தன் ஆபீஸின் வாயில் பக்கம் கேமராவில் எட்டிப் பார்த்தான். தன் பில்டிங்கிற்கு கீழே இருந்த கேமராக்களை கண்காணித்தான். கீழே செக்யூரிட்டியிடம் போனில் பேசி உள்ளே யாரும் அநாவசியமாக வரவில்லையே எனக் கேட்டு உறுதி செய்தான்.

தனக்குத் தெரிந்த செக்யூரிட்டி பாதுகாப்பு தரும் அலுவலக தலைமை ஒருவருக்கு போன் செய்து நாளை முதல் ரிஷாவை பாதுகாக்க வேண்டிய தேவையை எடுத்துச் சொன்னான். அதற்கான தொகை எவ்வளவு என்பதையும் போனின் எதிர்முனை சொல்லச் சொல்ல தன் டைரியில் குறித்துக் கொண்டான்.

ரிஷா இந்தரையும், ரிஷியையும் மாறி மாறி கவனித்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

போனிலிருந்து நிமிர்ந்தவன், தேவைப்பட்டால் நாளையே மும்பை போலீசிலும் ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்து விடுவோம் என்றான்.

ரிஷாவும், இந்தரும் தலையசைத்தனர்.

அதுசரி இத்தனை நடந்திருக்குதே? நீங்க இரண்டு பேரும் முதலில் போலீசில் போக வேண்டுமென எண்ணவில்லையா?”, ஆச்சரியமாய் கேட்டான்.

Pages: 1 2 3 4 5 6 7


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!