Epi 10_Thurathum Nizhalgal_Jansi

அந்த மற்றவனோ, தான் ரிஷாவின் கழுத்தில் துப்பாக்கி வைத்திருப்பதை வெளியில் இருப்போர் அறியாத வண்ணம் அவன் பின்னால் வந்தவர்கள் அவனை நெருக்கி இடித்துக் கொண்டு மறைத்தவாறே படிகளில் இறங்கினர். 

அனைவரும் பிறர் கண்ணில் தவறாக தெரியாத வண்ணம் வெகு இயல்பாய் நடந்தனர்.

கீழே ரோடு ஜனசந்தடி அற்று சற்றே அடங்கி இருந்தது, அந்த வயதான செக்யூரிட்டி தாத்தா தன் இடக்கையில் சுண்ணாம்பைத் தடவி, வலக்கையால் தம்பாக்கூவை (tobacco) அதில் தட்டி, சுண்ணாம்பையும் பாக்கையும் தன் வலது பெருவிரலால் லயத்தோடு சில நொடி தேய்த்து தன் கீழுதட்டுக்கும் பற்களுக்குமிடையிலான மென்மையான சருமப் பகுதியில் அடக்கி, சீக்கிரமே மவுத் கேன்சர் வரப் போவதை உணராமல் கண்கள் சொக்கி அதன் சாற்றை ருசித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் அவரைக் கடந்துச் சென்றிருந்தனர்.

வெளியில் இருந்து பார்ப்போருக்கு வித்தியாசமாக தெரியாத வண்ணம் ஏதோ ஒரு விழாவிலிருந்து திரும்ப வருவது போல கலகலவென பேசி சிரித்து அவர்கள் அந்த செக்யூரிட்டியை கடந்தார்கள்.

இந்தர் மற்றும் ரிஷியின் மொபைலை அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டான் ஒருவன். ரிஷி தவழ்ந்து உள்ளறைக்குச் சென்று லேண்ட்லைனை அடைந்து கீழே செக்யூரிட்டிக்கு தொடர்புக் கொண்ட போது அவர்கள் ஏற்கெனவே அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டிருந்தனர். 

பின் சீட்டில் ரிஷா மயக்கமாகி கிடக்க மும்பையின் ஒதுக்குப் புறமான இடத்திற்கு பயணித்து, மும்பையை தாண்டியும் பயணித்து கும்மிருட்டில் மாயமாய் மறைந்தது அந்த ஸ்கார்பியோ.

தொடரும்

Pages: 1 2 3 4 5 6 7


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!