Epi 14_Thurathum Nizhalgal_Jansi

இந்த சூழலில் கனகவேலின் மகன் திடீரென்று காணாமல் போய்விட, பல்வேறு தேடல்களுக்கிடையில் தண்ணீர் குட்டையினுள் அவன் பிணமாய் மீட்கப்பட்டான். 

பிரச்சனை இன்னும் பெரிதாயிற்று. தன் மகனை கொன்றது ருத்ரபாண்டியாகத்தான் இருக்க வேண்டும் என கனகவேல் போலீஸில் புகாரளித்தார். விசாரணை தொடர்ந்துக் கொண்டு இருந்தது. இவ்வாறு இரண்டு நண்பர்கள், அவர்களுடைய பிரச்சனைகள் என ஒற்றையாய் சண்முகம் அல்லல் பட்டுக் கொண்டிருந்த போது, அவர் வேலைகளை பகிர்ந்துக் கொண்டு அரங்க நாதனும், சந்திரனும் தூணாய் தாங்கிக் கொண்டனர்.

அப்படி ஒரு நாளில் தான் ரிஷா  இரவோடு இரவாக  சென்னையிலிருந்து  மற்றொரு மாநிலத்திற்கு கூட்டிக் கொண்டு செல்லப்பட்டு,  இன்னும்  சில சில இடங்களில் மாறி,  டார்ஜிலிங்கிற்கு வந்துச் சேர்ந்தாள். அவள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படவில்லை.

முதலில்  அவளோடு இருந்த  அம்மா, அவளுக்காக அங்கேயே  ஸ்கூல் முதலான  ஏற்பாடுகளை செய்தார். அதனை தொடர்ந்து வந்த அப்பா ஷாரதாவை அவளுக்கு துணைக்கு வைத்துவிட்டு, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டுச் சென்றார்.

அதன்பின்னர்  அவள் வாழ்வில் நடந்தது தான் நம் அனைவருக்கும் தெரிந்தவை ஆயிற்றே.

தன் சுய உணர்வு முழுவதுமாக இல்லாத போதிலும் அவர்கள் சொல்வதை கவனம் கொடுக்க முயன்றாள். காட்சிகள் கண் முன்னே படமாக விரிந்தன.

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!