Epi 14_Thurathum Nizhalgal_Jansi

சுந்தரின் ஆத்திரம் எல்லை மீறிப் போயிருந்தது. எப்படியோ நாட்களை கடந்திருந்தான், இனியும் பொறுக்க முடியாது. தன் முடிவில் இன்னும் உறுதிக் கொண்டான்.

முதலில் தான் வாங்கி இருந்த புதுவிதமான சட்டைகளில் ஒன்றை அணிந்துக் கொண்டான். ஒரு சலூன் கடைக்குச் சென்று தன் தலை முடியை மாறுதலாக வெட்டிக் கொண்டான். அவன் முகத்தை இப்போது அவனாலேயே அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. நல்லதாக போயிற்று, மிக நல்லதாக போயிற்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

தெருவோரக் கடையினின்று அந்த நீளக் கத்தி, கூர் பார்த்துக் கொண்டான். கையில் சட்டென்று இரத்தப் பூ பூத்து நிற்க திருப்தி, மிகவே திருப்தி.  

மெடிக்கல் ஸ்டோரில் சென்று சில பொருட்களை வாங்கிக் கொண்டான். மறுபடி தன் சொந்தங்கள் இருக்கும் இடத்திற்கு பயணமானான். தன்னுடைய இலக்கு ஜெயிக்க வேண்டும் எனும் தீவிரத்தில் அவனது இதயம் வேகமாய் துடித்துக் கொண்டு இருந்தது.

இதோ வந்துவிட்டான், சண்முகத்தின் வீடு கண்ணுக்கெட்டிய தூரத்தில் தான் இருந்தது. இருட்டும் வரை காத்திருந்தான். டியூசன் முடித்து வழக்கமாக ரிஷா திரும்பும் போது மாலை ஏழு மணிக்குள்ளாகவே அங்கு இருள் படர்ந்து விடும். 

அந்த இருள் தான் அவனுக்கு வேண்டும். ஆம், இருளில் அவளைக் கண்டதும் ….மனதிற்குள்ளாக தான் எண்ணியவற்றை ஒருமுறை ஓட்டிப் பார்த்தான். ம்ம்… அவள் வரும் முன் செய்ய வேண்டியவை மனதிற்குள் தெளிவாகிற்று.

மறைவில் சென்று தான் எடுத்து வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து முடித்தான். சட்டையை திறந்து இதயத்தின் பக்கம் நீவினான். பல நாட்களாக ‘ரிஷா’ என கத்தியால் தீட்டி தீட்டி வைத்திருந்த அவள் பெயர், அதனால் ஏற்பட்ட உடல் வலி அவனுக்கு சுகமாக இருந்தது. கையில் இருந்த கத்தியால் மறுபடியும் தன் நெஞ்சில் கீறினான்.

ரிஷா.. ஆஹா அந்த வலியும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் பத்தே நிமிடத்தில் ரிஷா இந்த வழியாக கடந்துச் செல்வாள். அவளை அலேக்காக பிடித்து கழுத்தை ஒரே சீவு.

‘கழுதை என்னுடன் பேச முடியாதா அவளுக்கு, இனி எப்போதுமே பேச தேவையில்லை. அதுதான் என்னுடன் அவளை அழைத்துச் செல்லப் போகின்றேனே?’ மனதில் எழுந்த மகிழ்ச்சி, திருப்தியில் இளித்தான்.

ஐந்து நிமிடம் கழிந்தது சண்முகத்தின் வீட்டருகே வந்து, எதிரில் இருந்த திண்டில் அமர்ந்தான். அது அவன் தீபாவளி அன்று போதையில் வெடி வெடிக்கும் போது அமர்ந்திருந்த திண்டு.

“ஏ யார் நீ புதுசா? ஏன் இங்கே உக்காந்திருக்க?” கேட்டவாறு சந்திரன் அவனை கடந்துச் சென்றான். 

அங்கே அமர்ந்திருப்பது தன் தம்பி என்றோ? அவன் ஏற்கெனவே விஷம் அருந்தி இருப்பதோ அவனுக்கு எங்கே தெரியும்? அதுதான் இவன் உருவத்தை முழுவதுமாக மாற்றி இருந்தானே.

தன்னை கடந்துச் சென்றவனையே இகழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். 

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!