Epi 17_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“பொண்ணு இப்பவே இவ்வளவு குண்டா இருக்காளே? கல்யாணம் ஆகி ஒன்னு இரண்டு புள்ளைங்க பொறந்துட்டா புருசனுக்கு அம்மான்னு சொல்லறாப்பல ஆகிட மாட்டாளா?” தங்களுக்குள்ளாக பேசிக் கொண்டனர்.

விருந்தினருக்கு பறிமாற வேண்டியவைகளை பறிமாறி விட்டு, அந்த அறையின் ஓரத்தில் ஒரு இருக்கையில் கொட்டாவியை அடக்கிக் கொண்டு அசௌகரியமாக அமர்ந்திருந்தவளை ஆனந்த் நோக்கினான்.

‘அவளுக்கு இவர்கள் குரல் கேட்டிருக்குமா? அதென்ன எதையோ பேசி விட்டு போங்கள் எனும் விதமான தவமுனி நிலையில் அமர்ந்து இருக்கிறாள்? அவளை பார்க்க பார்க்க அவனுக்கு ஆச்சரியம் தான். இவள் நானறிந்த பாப்பு இல்லை, மிக அழுத்தமானவள்’, என மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டான்.

பெண் பார்க்க வந்து விட்டு பேசத் தெரியாமல் ஆண்கள் கூட்டம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உள்ளூர் அரசியல், ஊர் பெருமை எல்லாம் பேசி விட்டு மாப்பிள்ளை பையனின் அருமை பெருமை எல்லாவற்றையும் எடுத்து விடலாகினர்.

“ஊர்ல இத்தனை ஏக்கரா நிலம் இருக்கு, இரண்டு சொந்த வீடு இருக்கு, கவர்மெண்ட் வேலை அப்புறம் என்ன குறை?” என மாப்பிள்ளையின் புகழ் பாட பெண்ணொருவர்

“என்ன இருந்தாலும் உங்களுக்கும் ஒரே ஒரு பொண்ணு நீங்க நல்லாதான் செய்வீங்க… இருந்தாலும் இப்ப எல்லாம் பெண்களுக்கும் சொத்துரிமை வந்தாச்சு. கல்யாணத்து அப்பவே பொண்ணுக்கான சொத்தை பிரிச்சு தந்துட்டீங்கன்னா நாங்களும் அப்புறமா கவலைப் பட வேணாம். என்னதான் அக்கா தம்பின்னாலும் வாயும் வயிறும் வேறதானே என்ன சொல்லுறீங்க?”

Pages: 1 2 3 4 5 6 7 8

error: Content is protected !!