Epi 17_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“அக்கா விபரம் தானே சொன்னா, நீ ஏன்டா கோச்சுக்கிற? காலையில புறப்பட்டு போயிடலாம்” என ஆனந்த் சொல்ல,

“ஐ க்னோ யூ வில் ஆல்வேஸ் சப்போர்ட் ஹெர்… பிகாஸ் யூ லைக் ஹெர் … யூ கால் அக்கா அஸ் பாப்பு பட் நெவர் எவர் கால்ட் மீ ஈவன் பாப்பி… ஆல்வேஸ் யூ கால் மீ அஸ் பிரசன்னா பிரசன்னா… யூ ஆல்சோ கால் ஹெர் அஸ் சம்பூ செம்பு… வொய் டோண்ட் யூ? ம்ம்” (நீங்க எப்பவுமே அக்கா சார்பா பேசுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா அக்காவை உங்களுக்கு பிடிக்கும். அக்காவை பாப்புன்னு கூப்பிடுறீங்கல்ல என்னையை என்னிக்காவது பாப்பினு கூப்பிட்டு இருக்கிறீங்களா? எப்ப பாரு பிரசன்னா பிரசன்னான்னு கூப்பிடறது. ஏன் அக்காவையும் சம்பூ சொம்பூன்னு அழைக்க வேண்டியதுதானே?)

“அடேய்” ஆனந்த் பேச்சற்று போனான்.

அக்காவுக்கு செல்ல பெயர் வைத்து அழைத்து விட்டு அவனை முழுப்பெயர் வைத்து அழைத்ததில் அவனுக்கு வருத்தமாம்… இவனை பாப்பி என்றழைப்பதா? நினைக்கவே சிரிப்பு வந்து தொலைத்தது.

“டே தம்பி”

“ஐ டிண்ட் லைக் திஸ்”

“பாப்பி நல்லா இருக்காதுரா”

“யூ கால் மீ சம்திங்க் எல்ஸ்” (வேற பெயர் வச்சு அழைங்க)

“தம்பி பையான்னு கூப்பிடவா?”

“ஓகே ஓகே ஐ வில் மேனேஜ்” (சரி பரவாயில்லை)

“வாடா டேய் கோச்சுக்காத பெரிய மனுசா” கட்டிலில் அமர்ந்த ஆனந்த் பிரசன்னாவை மடியில் வைத்து கட்டிக் கொள்ள அவனும் ஆனந்தை கட்டிக் கொண்டான்.

Pages: 1 2 3 4 5 6 7 8

error: Content is protected !!