Epi 17_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“வாங்கத்தான்”

‘எத்தனை அழகாக இருக்கின்றாள்!’ என அவளை கண்டதும் எண்ணிக் கொண்டவன் அதனை சொல்லாமல் மறைத்தான்.

“ஹெவியா இருக்குன்னு சொன்ன சேலை மாத்தலை?”

“அது ஜ்வெல்ஸ் அத்தான்… அதுதான் ரொம்ப ஹெவி, மாத்திட்டேன்” புன்னகைத்தவள் “இது அம்மா சேலை” நீவினாள்.

“இதை இன்னும் கொஞ்ச நேரம் உடுத்துட்டு அப்புறமாதான் மாத்தணும்”

அக்காவின் அருகில் சென்ற பிரசன்னா அந்த சேலையின் முந்தியை எடுத்து முகர்ந்து பார்த்தான்.

“இஸ் திஸ் ஹவ் அம்மா ஸ்மெல்ஸ் அக்கா?” அம்மா வாசம் இப்படித்தான் இருக்குமாக்கா? எனக் கேட்டவனுக்கு சம்பூர்ணா “ம்ம்” எனச் சொல்லி புன்னகைத்து தலையாட்டினாள்.

தானெல்லாம் இருபத்தி சொச்ச வருடங்கள் தாயின் அருகாமையை உணர்ந்த பின் இழந்திருக்க, தாயின் நிழல் கூட கண்டிராத பிரசன்னா முன்பு தனது துயரமெல்லாம் ஒன்றும் இல்லை என ஆனந்திற்கு ஒரு நொடி எண்ணம் தோன்றி மறைந்தது.

தமக்கைக்கும் தமையனுக்கும் அப்படியெல்லாம் துயரம் ஒன்றுமில்லை போலும் அவர்கள் இன்னும் சேலையை முகர்ந்த வண்ணம் புன்னகைத்துக் கொண்டுதான் இருந்தனர்.

மாப்பிள்ளை வீட்டார் இந்த சின்னஞ்சிறுவனை பங்காளியாக பாவித்து சொத்து பிரித்து தரச் சொன்னதை ஆனந்த் நினைவு கூர்ந்தான். ‘அவர்கள் எங்கே திருமணத்திற்கு பின்னதாக பாப்புவையும் பிரசன்னாவையும் சேர விடுவார்கள்? பார்த்து பேசக் கூட அனுமதிப்பார்களோ என்னமோ? பேராசை பிடித்தவர்கள்…’ மனதிற்குள்ளாக பொருமிக் கொண்டான்.

“நாளைக்கு சுத்த போகலாமா?” கேட்டு இருவரின் கவனத்தையும் கலைத்தான்.

“வாவ் சூப்பர் அத்தான்” ஓடி வந்து கழுத்தை கட்டிக் கொண்டு தொங்கிய பிரசன்னாவின் செயலில் ஆனந்திற்கு ஒரு நொடி மூச்சு திணறினாலும் கூட, சுதாரித்தான்.

Pages: 1 2 3 4 5 6 7 8

error: Content is protected !!