Epi 17_ Manam Virumbudhe unnai unnai_Jansi

கணேசன் ஏதோவென்று வந்து எட்டிப் பார்க்க பின்னோடு வந்த முத்துராஜீக்கும் இருவரை பார்க்க புன்னகை தொற்றிக் கொண்டது.

அடுத்த நாள் காலையே வாடகை காரில் மூவரும் புறப்பட்டனர். பெரியவர்கள் இருவரும் வரவே இயலாது என சொல்லி விட்டிருக்க, மூவர் மட்டுமே இருந்தனர். அதிகாலையே புறப்பட்டதில் சீக்கிரமாகவே தாஜ்மஹலை அடைந்து இருந்தனர்.

உலக அதிசயத்தை முதன் முறை பார்ப்பதென்றால் சும்மாவா? வாயடைத்துப் போன நிலைதான். அதனை வடிவமைத்தவனுக்கு எத்தனை கலை நயம் இருந்திருக்க வேண்டும். இது பின்னொரு நாளில் உலக அதிசயமாக மாறும் என்றெண்ணியா படைத்திருப்பான்? இல்லையே.

இத்தனை அழகாக, நுணுக்கமாக சிறப்பானதாக படைக்க வேண்டும் என எண்ணி படைத்ததில் அத்தனை அழகாக அக்கட்டிடம் பற்பல வருடங்களாக நிமிர்ந்து நிற்கின்றது.

விதவிதமாக புகைப்படங்கள் எடுப்பதில் பிரசன்னா இலயித்திருந்தான்.ஆனந்தின் நவீன வகை கேமரா பிரசன்னாவின் கைகளில் படாத பாடு பட்டது.

“தம்பி பையா இப்படி நின்னு எடுரா” ஆனந்த் பிரசன்னாவுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்க கொஞ்ச நேரம் அவர்களை பார்த்து புன்னகைப்பதுவும் மற்ற நேரம் தான் காண தவித்திருந்த அந்த அழகான கட்டிடத்தை பார்வையிடுவதுமாக சம்பூர்ணா ஒரு விதமான மோனநிலையில் இருந்தாள். இவர்களது புகைப்படம் எடுக்கும் போட்டியில் ஒரு முறை ஆனந்துடன் என்றால் மறுமுறை பிரசன்னாவுடன் என்று பெரும்பாலான புகைப்படங்களில் அவளே நிறைந்திருந்தாள்.

“என்னடா உங்க அக்கா மோனலிசா போஸ்லயே நிக்குறா தம்பி பையா? புதுசா ஏதாச்சும் போஸ் கொடுக்கச் சொல்லு” ஆனந்த் சொல்ல,

“அக்கா டர்ன் லெஃப்ட், டர்ன் ரைட் ஸ்மைல் அக்கா” என ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லி அவளை மட்டும் வைத்தே பத்திருபது புகைப்படங்கள் எடுத்தான்.

சிம்பிளான குர்த்தி, பட்டியாலாவில், நீண்ட காதணிகளும், ஒரே ஒரு க்ளிப்பில் அட்க்கி வைத்த முன் நெற்றி முடியும் அந்த விரிந்த கூந்தலும் எளிமையாய் மிக அழகாய் இருந்தாள் அவள்.

Pages: 1 2 3 4 5 6 7 8

error: Content is protected !!