Epi 17_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“எங்கே போகலாம்?”

“பிரசன்னாக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கே?” சம்பூர்ணா தயங்கினாள்.

“ஒரு நாள் லீவு எடுக்கட்டுமே பாப்பு… எனக்கும் இதை விட்டா பின்ன வாய்ப்பு கிடைக்கணுமே?…”

“சரித்தான்… எதுக்கும் அப்பா கிட்ட ஒரு தடவை சொல்லிடுங்க.” சம்பூர்ணா உடனே ஏற்றுக் கொண்டாள்.

“வாவ்… சூப்பர் டுமாரோ இஸ் ஸ்கூல் ஆஃப் ஃபார் மீ” (நாளை எனக்கு பள்ளி லீவு) குதித்தவன் அங்கேயே ஆட்டம் போட இவர்களுக்கு சிரிப்பு வந்தது.

“எங்கே போகலாம்? அக்கம் பக்கம் எங்கேயாவது?” மறுபடி கேட்டான்.

“இங்கே திங்கள்கிழமை பெரும்பாலும் கடைகள் அடைச்சிருக்கும் அத்தான்” சம்பூர்ணா சொன்னாள்.

“ஷால் வி கோடு தாஜ்மஹல்? வீ நெவெர் பீன் தெர்.” தாஜ்மஹல் போகலாமா என பிரசன்னா தான் ஆரம்பித்தான்.

“தாஜ்மஹல் திங்கக்கிழமை திறந்திருக்குமா?”

“யெஸ் இட்ஸ் ஒன்லி க்ளோஸ்ட் ஆன் ஃப்ரைடே, மை ஃப்ரெண்ட் டோல்ட் மீ” தாஜ் மஹல் வெள்ளிக்கிழமை மட்டும் தான் அடைச்சிருக்குமாம், என் பிரண்ட் சொன்னான்” இப்போது பிரசன்னா ஆனந்தை ஈஷிக் கொண்டு நின்றிருந்தான்.

“ஓ சூப்பர்”

“அத்தான் இங்கே இருந்து ட்ராவலிங்கே மூணு மூன்றரை மணி நேரமாகும்”

“அக்கா ஆல்வேஸ் ஹேஸ் சம் ஆர் அதர் ப்ராப்ளம்” (இந்த அக்காவிற்கு எல்லாவற்றிலும் பிரச்சனைதான்) எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போடும் அக்கா மீது தம்பியாருக்கு கோபம் வந்து விட்டிருந்தது.

Pages: 1 2 3 4 5 6 7 8

error: Content is protected !!