இரவு வீட்டிற்கு திரும்பும் போதே வெளியில் சாப்பிட்டு இருந்தனர். ஏற்கெனவே சொல்லி வைத்தது போல கணேசனும் முத்துராஜீம் கூட உண்டு உறங்க ஆயத்தமாக இருந்தனர்
அப்பா இவனைக் கண்டதும் எழுந்து வந்தார், இவர்கள் தங்களது வீட்டிற்கு புறப்பட்டனர்.
அப்பா ஏதெதோ சொல்லிக் கொண்டிருக்க, இவன் தனது கேமராவில் பதிந்திருந்த புகைப்படங்களை பார்த்தான். தன்னருகே இடைவெளி விட்டு நின்று புன்னகைத்து இருப்பவள் மீதே விரல் வட்டமிட்டது.புகைப்படத்தில் இருந்த அந்த இடைவெளி அவனுக்கு நெருடியது. அந்த ஒளி வீசும் புன்னகை முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென மனம் சொன்னது. தனக்கு சில நாட்களாக ஏற்பட்ட புகைச்சல், பொறாமை உணர்விற்கு காரணம் புலப்பட்டதும் மனம் அமைதியானது.
‘காலம் இன்னும் கடந்துவிடவில்லை’ என தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டான்.
“ஊர் நிலத்தை வித்து கல்யாணத்தை முடிக்கணும்னு கணேசன் சொல்லுறான்.. பொன் விளையுற பூமி அது…” என்னென்னவோ சொல்லிக் கொண்டு இருந்த அப்பா முன்பாக வந்து நின்றவன்,
“அப்பா பாப்புவை எனக்கு கட்டிக் கொடுப்பாங்களான்னு மாமா கிட்ட
கேட்டுச் சொல்லுறீங்களா?” என கேட்டு நின்றான்.
தொடரும்

