Epi 4_Thurathum Nizhalgal_Jansi

அவளிடம் இருக்கும் பணத்தில் தற்போது ரெயிலில் என்ன ப்ளைட்டிலேயே சென்னைக்கு பயணமாக முடியும். ஆனால், அவளை ஷாரதாவின் பேச்சு கட்டிப் போட்டிருந்தது. நிகழ்ந்தவற்றிலிருந்து அவள் ஒன்று மட்டும் புரிந்துக் கொண்டிருந்தாள். ஷாரதாவின் சொல், செயல் அனைத்தும் அவள் பாதுகாப்பிற்காக மட்டுமே தான் இருக்கும் என்பது. அதனால் அவரின் பேச்சை தட்டாமல் அவர் சொன்ன அதே இடத்திற்கு பயணமாக முடிவெடுத்து விட்டாள்.

இத்தனையும் அவள் யோசித்து முடிக்க ஒரு மணி நேரம் கடந்து விட்டிருந்தது. அருகிலிருந்த ஸ்டாலில் இருந்து டீயும் பிஸ்கட்டும் வாங்கி உண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அந்த ஷாரதா மற்றும் தடியர்களின் சண்டை முடிந்து சில நேரம் கழித்தே வந்த இரயில் போலீசார் சுற்றும் இருந்தவர்களை விசாரித்து ஒன்றும் புரியாமல் திரும்பிச் சென்றதை கவனித்தாள். அவளது உடை மறுபடியும் அவளை பாதுகாக்க இவளிடம் போலீஸார் விசாரிக்கவில்லை.

மும்பை வந்து சேரும் முன்பே தன் உடையை மாற்றியவள். புர்காவை பையினுள் பத்திரப்படுத்தினாள். அதை அணிந்து அவளால் சாதாரணமாக நடமாட இயலவில்லை என்பது ஒரு காரணமென்றால், இனி யாரும் அவளைத் தேடி வர மாட்டார்கள் எனும் மனதின் தைரியம் மற்றொரு காரணம்.

மற்றொரு உடையை அணிந்து முகத்தை சீராக்கி இருந்தவள்

பையை திறந்தாள், அச்சோ என்ன இது? அவள் பையில் இருந்த பொருட்கள் தண்ணீரில் தழும்பி நின்றது . வாங்கிய தண்ணீர் பாட்டிலை பையில் வைத்திருக்க அதன் மூடி திறந்து தண்ணீர் கசிய எப்போது அது பையை நிரப்பியதோ அவளுக்கே தெரியாமல் இருந்திருக்கிறது. வழக்கம் போல அவள் ஆழ்ந்த சிந்தனைகள் தான் அதற்கும் காரணம் என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.

 உள்ளே இருந்தவற்றை அப்படியே பற்றியவாறு தான் அமர்ந்திருந்த இடத்தின் பின்னே இருந்த இடத்தில், தன் பையில் இருந்த தண்ணீரை சரித்து கொட்டியவள் அத்தனை தண்ணீரும் வெளியேறியதும் பையின் ஈரம் போக என்ன செய்வது என புரியாதவளாக பொருட்களின் நிலையை சரி பார்த்தாள்.

 வங்கி டாகுமெண்ட்களும் ப்ளாஸ்டிக்கில் பத்திரமாய் இருந்திருக்க, அது குறித்து ஆசுவாசம் கொண்டவள் போட்டோவும் சில தாள்களுமாய் இருந்தவற்றை எடுத்துப் பார்த்தாள் அவை தண்ணீரில் முற்றும் நனைந்ததாய் இருந்தன.

 நனைந்தவற்றில் தான் மும்பையில் எந்த விலாசத்திற்கு செல்ல வேண்டும் என்று தேடும் விபரம் இருக்கும் என்று எண்ணியவளாக பையை மடியில் வைத்து மறுபடி இருக்கையில் அமர்ந்து அவற்றை அமைதியாக பிரித்துப் பார்த்தாள். இரண்டாய் மடித்திருந்த கற்றைத் தாள்களை திறக்க, நடு மத்தியில் இருந்த புகைப்படம் தண்ணீர் பட்டு முழுவதும் சிதிலமாகி வண்ணக் கலவையாய் மாறி இருந்தது. அந்த புகைப்படத்தின் நிறம் , தன்னை மூடி இருந்த தாளில் பரவி எழுத்துக்களை மறைத்து இருந்தது.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!