Epi 4_Thurathum Nizhalgal_Jansi

ஜனத் திரளுக்குள்ளாக வந்த பின்னர் அவர்களின் ஓட்டம் யாருக்கும் விசித்திரமாய் தோன்றவில்லை. தினமும் வேலையை விட்டு திரும்புகின்றவர்கள் கூட இரயிலை பிடிக்க இவ்வாறு ஓடுவதுண்டே.

அவசரமாய், தர தரவென்று இழுத்து அழைத்து வந்த அவன் புறப்பட தயாராக நின்ற லோக்கலின் காலியான ஒரு பெட்டியில் தானும் ஏறி அவளையும் உள்ளே இழுத்துப் போட்டான். 

தான் புறப்படுவதாக குரலெழுப்பி மும்பை லோக்கல் நகர்ந்து வேகமெடுக்க, அதுவரை அவளை இழுத்து வந்தவன் கைப்பிடி தளர்த்தி அவளை உதறி விடவே தடுமாறி நின்றாள் அவள்.

“அறிவில்ல உனக்கு? ஒதுங்கி நிக்காம ஓடி வர்ற, என் பின்னால அத்தனை பேரும் ஓடி வந்துட்டு இருக்காங்க… நான் என் உயிர காப்பாத்துறதா? இல்லை உன்னைப் பார்க்குறதா? இந்த பொண்ணுங்களுக்கே யாராவது ஹீரோ வந்து காப்பாத்தணும்னு நினப்பு.”

“ஆம்பளைங்க முன்னேறாம போறதுக்கு காரணமே இவங்கதான்… “

விடாமல் பொறிந்துக் கொண்டிருந்தவனை ஆத்திரம் மிக முறைத்துக் கொண்டிருந்தாள் ரிஷா.

தொடரும்

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!