Epi 17_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 17_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 17

கணேசனின் இல்லத்தில் சம்பூர்ணாவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார்கள் ஆண்கள் ஒரு பக்கம் பெண்கள் ஒருபக்கம் என இருந்தனர். சம்பூர்ணா அவர்களுக்கு தேவையான சிற்றுண்டி முதலாக பறிமாறிக் கொண்டு இருந்தாள். பெண்கள் அவளை அக்கு வேறு ஆணி வேறாக தராசில் நெறுத்துக் கொண்டு இருந்தனர்.

ஆனந்தின் கவனம் மாப்பிள்ளை பையனில் இருந்தது. தனது பாப்புவுக்கு அவன் சரியான ஜோடிதானாவென இவன் தனது பார்வையால் அளந்தான். மாப்பிள்ளை பையனை சொல்லப் போனால் பையன் என்று சொல்லக் கூடாது, அந்த நபரின் வயது முப்பதை தாண்டி இருக்கக் கூடும். பார்க்க தோற்றத்திற்கு மிக ஒல்லியாக முகம் முத்தலாக தெரிந்தது. சிகரெட் குடிப்பவன் போலும் உதடுகள் கருப்பாக இருந்தன. 

‘மாப்பிள்ளை குறித்து மாமா சரியாக விசாரித்து இருப்பாரா?’ என இவன் மனதிற்குள்ளாக ஒரு எண்ணம் தோன்றினாலும், அவர் மாப்பிள்ளையின் தோற்றத்தை எல்லாம் கணக்கில் எடுக்காமல் தன்னைப் போல அரசாங்க வேலையில் இருக்கின்ற நபரை தேர்ந்தெடுத்து இருப்பது நன்றாக புரிந்தது.

மகளின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் எனும் அவரது உள்ளக் கிடக்கையில் எந்த தவறும் இல்லை. ஆனால், திருமணத்திற்கு மகளின் விருப்பமும் தேவை என அவர் உணராதது ஏனோ? என எண்ணிக் கொண்டிருந்தவன் மறுபடி மாப்பிள்ளை வீட்டில் இருந்த ஒரு துடுக்கான பெண்மணியின் குரலை கேட்க நேரிட்டது.

Pages: 1 2 3 4 5 6 7 8

error: Content is protected !!