அத்தியாயம் 10_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 10

மேற்காணும் பிஸ்டலின் பெயர் ‘Pistol Auto 9mm 1A’ இந்த வகை பிஸ்டல்கள் நமது இந்திய இராணுவம்,மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில போலிஸார்களால் அதிகம் பயன்படுத்தப் படுபவை ஆகும்.
செமி ஆட்டோமேடிக் மற்றும் செல்ஃப் லோடிங் வகையைச் சேர்ந்த இந்த பிஸ்டல் இவை 13 சுற்று திறன் கொண்டது.
****
அந்தப் பழைய கட்டிடத்திற்கு முன்னால் நின்றது டாக்ஸி. அவசரமாய் ரிஷாவின் மற்றொரு பையை கையில் எடுத்துக் கொண்டான். கைப்பையோடு இறங்கிய ரிஷா டாக்ஸிக்கு பணம் கொடுக்க பர்ஸ் எடுக்கும் முன் அவளைத் தடுத்து ரூபாயை கொடுத்து டாக்ஸியை கட் செய்து அனுப்பி விட்டான்.
அக்கம் பக்கம் பார்வையை சுழற்றிக் கொண்டவனாக, சரி வா என்றவனாய் தனக்கு சமமாய் அவளை நடத்திக் கொண்டே நகர்ந்தான். அந்த சாலை கொஞ்சம் ஜன நெருக்கடியானதாகவே இருந்தது.
இந்தரின் கண்கள் இங்குமங்குமாக சுழன்ற வண்ணமாகவே இருந்தது. அவசரமாய் லிப்ட் இல்லாத அந்த பில்டிங்கின் குறுகிய படியில் அவளை மூன்றாம் மாடிக்கு அழைத்துச் சென்றான். அந்த பில்டிங்கின் மற்ற எல்லா பகுதியும் அலுவலகமாக பயன்படுத்தப் பட்டு வந்தது புரிந்தது. மேல்மாடியில் ஏதோ ஒரு திருமண விழா நடைபெறுவதற்கான அறிகுறியாக ஸ்பீக்கரில் பாடல் சப்தங்கள் கேட்டன.
காலம்… வழக்கம் போலவே அன்றைய நாளும் தன் பணியில் அயராது செயல்பட்டதால் அப்போது நேரம் இரவு மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டு இருந்தது.
அந்த குறுகிய படிகள் ஏறி மேலே வர ரிஷியின் ஆபீஸ் கண்ணில் பட்டது. கண்ணாடிக் கதவை திறந்து இருவரும் உள்ளே நுழைந்தனர். கதவு தானாகவே அடைக்கப்படவும், மேல் மாடியின் பாடல் சப்தம் அடங்கி அமைதி நிலவியது.
ஏசியின் காற்று இருவரின் முகத்தில் அறைந்து, அவர்கள் மூச்சில் மேலும் ஆக்ஸிஜன் சேர்த்தது.
முன்னறையில் ரிசப்ஷன் போல அமைந்திருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தனர், ஏறத்தாழ சாவின் விளிப்பிற்கு மற்றொரு முறை சென்று வந்த உணர்வில் இருவருக்குமே பெருமூச்செழுந்தது.
“ப்ளீஸ் கம்”, என்று கதவை சற்றே திறந்து உள்ளே இருந்து ஒரு நவநாகரீக தோற்றமுடைய வாலிபன் கதவை திறந்து எதிர்க் கொண்டான். குறுகலான அந்த இடத்திலும் கூட இண்டீரியரின் தயவில் தாராளமாக அந்த அறையின் தோற்றம் காணப் பட்டது. வெகுவான புத்தகங்கள் சுவற்றின் அலமாரியில் காணப்பட்டன.
அந்த அறைக்குப் பின்னால் ஒரு மறைவான அறை இருக்கும் போலும் இடையில் திரை ஒன்று மறைந்து இருந்தது. டேபிளில் சில நவீன எலெக்ட்ரானிக் சாதனங்களோடு கூட லேப்டாப் ஒன்றும் காணப்பட்டது.
அருகில் சமீபத்திய மாடல் ப்ரிண்டர் ஒன்றும் அதன் அருகில் சமீபத்தில் எடுக்கப் பட்ட ப்ரிண்டுகள் நாங்கள் இன்னும் பைல் செய்யப் படவில்லை எனக் காட்டுவனவாய் பைலின் வெளியே நீட்டிக் கொண்டு, மெல்லிய ஏசிக் காற்றில் அசைவாடிக் கொண்டும் இருந்தன.
டேபிளில் லேப்டாப் அருகில் ஒரு டைரியும், பென் ஹோல்டரில் சில பென்களும் இருந்தன. சுவற்றில் பிண்ணனியில் இருள் சூழ் நீல வானமிருக்க, நிலவொன்று ஒளி பரப்ப, தங்கள் கால் குளம்புகள் காற்றில் மிதக்க ஓடிக் கொண்டிருக்கும் குதிரைகள் படமொன்று விஸ்தாரமாய் அலங்கரித்தது.
இப்படிப்பட்ட குதிரைப் படங்கள் அதாவது ஓடிக் கொண்டிருப்பன போன்றவை தங்கள் பார்வையில் படும்படி வைத்திருப்பது எல்லாம் உளவியல் ரீதியாக உத்வேகம் தருவன, நேர்மறை சிந்தனை கொண்டு வருவன என தான் அறிந்திருந்த உளவியல் விபரம் ஒன்று ரிஷாவிற்கு மனதிற்குள் உலா வந்துப் போனது.


Leave a Reply