Epi 19_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“ம்ம்… இனி மறுபடி மாப்பிள்ளை தேடணும்…இந்த மாப்பிள்ளை இங்கே பக்கம் தான் பிள்ளையை அடிக்கடி போய் பார்த்துட்டு வந்துக்கலாம்னு இப்படி நாலும் நினைச்சுதான் பார்த்தேன்” என்றவராக கணேசன் எண்ணத்தில் ஆழ்ந்திருக்க,

“பேசாம நம்ம பாப்பாவை ஆனந்துக்கு கட்டிக் கொடுத்துடுறியா? நல்லா பார்த்துப்பான்” என முத்துராஜ் கேட்டதும் கணேசனின் கண்கள் ஒரு நிமிடம் மலர்ந்தன.

“நம்ம தம்பியா?”

“ம்ம்”

“பாப்பாக்கு விருப்பம் இருந்தா மட்டும்…”

“நீ கேட்டு உனக்கு இல்லைனு சொல்வேனா?, அதெல்லாம் அவளுக்கு என்ன தெரியும்? விருப்பம் எல்லாம் கேட்க வேணாம். நான் சொன்னா அவ சரின்னு சொல்லி கட்ட போறா”

“இந்த அவசரம்தான் ஆகாதுங்கிறேன், அவன் வரட்டும் இரண்டு பேரும் பேசட்டும். இரண்டு பேருக்கும் விருப்பம் இருந்தா நாம திருமணம் முடிச்சு வைப்போம்.”

“இது நல்லா நடக்குமாடா?” உணர்ச்சி வசத்தில் நண்பரின் கரங்களை பிடித்துக் கொண்டார்.

“நடக்காம பின்ன? எம்மவனுக்கு பொண்ணு கொடுக்க உனக்கு விருப்பம் தானே?”

“அதெல்லாம் விருப்பம்தான், நம்ம கண் முன்ன வளர்ந்த பையன். அவனை பத்திதான் நமக்கு எல்லாம் நல்லா தெரியுமே?”

“இருந்தாலும், பத்து வருசம் வெளிநாட்டில இருந்திருக்கான்”

“அவன் உன் வளர்ப்புடா, அண்ணி வளர்ப்பு. ஒரு வாரமா நம்ம வீட்டுலதான் இருக்கிறான். ஒரு பார்வை இங்கே அங்கே ம்ஹீம். அப்படி இருந்தா நான் நேத்து புள்ளையை கூட போக விட்டுருப்பேனா?”

“ம்ம்ம்… கொஞ்சம் வயசு வித்தியாசம் இருக்கு, அதனால யோசிச்சேன்.”

“அதெல்லாம் தம்பி பார்க்க அத்தனை வித்தியாசமா தெரியலை. இரண்டு பேரும் ஜோடியா பார்க்க நல்லாவும் இருப்பாங்க.”

“ம்ம்”

“என்ன? ரொம்ப தூரமா போச்சு… நாடு விட்டு நாடு” முனகினார்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9

error: Content is protected !!