சில நிமிட அமைதிக்கு பிறகு,
“அப்பாகூட சண்டை போட்டீங்களான்னு கேட்டில்ல?”
“ம்ம்”
“எதுக்காக சொல்லவா?”
“சொல்லுங்க?”
“உன்னை கட்டிக்கிறதுக்காக அப்பாக்கிட்ட மாமா கிட்ட போய் பொண்ணு கேளுங்கன்னு சொன்னேன்”
“ஆ…” திறந்த வாய் மூடாமல் அவனை பார்த்திருந்தவள் எழுந்தே நின்று விட்டிருந்தாள்.
“உனக்கு வயசாகிருச்சு, நீ இந்தியா வராம வெளி நாட்டில இருக்கிறவன், நீ கவர்மெண்ட் ஜாப் பார்க்கலை… இன்னின்ன காரணத்துக்காக உனக்காக பொண்ணு கேட்டு போக முடியாது இப்படி எல்லாம் சொல்லிட்டார்”
“….”
“இப்ப என்னன்னா மாமா கிட்ட பேசியாச்சு பாப்புக்கு சம்மதம்னா அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் போய் சம்மதமான்னு கேட்கச் சொன்னார். என்னை கட்டிக்க உனக்கு சம்மதமா பாப்பு?”
ஏற்கெனவே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்க என்ன கேட்கிறோம் என புரியாமலேயே
“என்ன என் மேல பரிதாபமா அத்தான்?” என கேட்டு வைத்தாள்.
“ஏன் உன் கை கால் உடைஞ்சு நொண்டியா இருக்கியா? உன் மேல நான் பரிதாபப்பட?” அவன் கடும் சொற்கள் இதமாகவே இருக்க புன்னகைத்தாள்.
“உங்களுக்கும் எனக்கும் எப்படி பொருந்தும்?”
“ஏது வயசா?” ஆரம்பிக்கும் முன்னதாக கை நீட்டி தடுத்தாள்.

