Epi 19_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“வயசை சொல்லலை, ப்ரொஃபஷன்… உங்களோடது ஷோ பிசினஸ்… நான் டீச்சர்.. நம்ம இயல்பும் அது போல மாறுதுதானே அத்தான்?”

“ஒரு டீச்சர் இன்னொரு டீச்சரைதான் கட்டணும், ஒரு டாக்டர் இன்னொரு டாக்டரைதான் கட்டணும்னு எல்லாம் லூசு மாதிரி ஏதாச்சும் கொள்கை வச்சுருக்கியா என்ன? மனுசங்களுக்குதான் கல்யாணம் ப்ரொஃபஷனுக்கு இல்லை.”

“இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கே”

“அதெல்லாம் ஒவ்வொன்னா சால்வ் செய்யலாம்… எனக்கு உன் கிட்ட ஒரே கேள்விதான் உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லியா?”

“…” சிரிக்க முயலும் அதரங்களை அடக்கிக் கொண்டவளாக அவனை பார்த்திருந்தாள்.

“எனக்கு உன் கிட்ட இன்னொரு கேள்வியும் இருக்கு…”

“ஒரே ஒரு கேள்விதான்னு சொன்னீங்க?”

“நான் கணக்குல வீக் சரியா…இப்ப இன்னொரு கேள்வி… உன்னால என்னை கட்டிக்க முடியுமா? முடியாதா?”

அவள் அதே பார்வையில் அவனை பார்த்திருக்க,

“இப்ப என்ன? எனக்கு வாழ்க்கை கொடு பாப்புன்னு உன் காலில் விழணும்னு நினைக்கிறியா?” கடுப்பாக கேட்க கலகலவென சிரித்தவள் தான் முற்றிலுமாக ஆயத்தமாக இல்லாத சூழ் நிலைக்கு தனது மனதை ஆயத்தப் படுத்த ஆரம்பித்தாள்.

உள்ளூர மத்தாப்புக்கள் தெரிக்க, பட்டாம் பூச்சிகள் பறக்க அவற்றை மறைத்த வண்ணம் இருவரும் உரையாடினர். உரையாடலின் முடிவில் தங்கள் வீட்டு பெரியவர்களுக்கு தங்களது முடிவுகளை சொல்ல இருவரும் புறப்பட்டனர்.

தொடரும்

Pages: 1 2 3 4 5 6 7 8 9

error: Content is protected !!