“அப்பப்ப இந்தியா வந்து போகப் போகிறதா சொன்னான், அதனாலதான் வீடு வாங்கினானாம்”
“ஓ”
“அப்படியே அவங்க வரலைனா டேய் எங்களுக்கு டிக்கெட் போடுறான்னு சொல்லி நாம அங்கே போயி பிள்ளைங்களை பார்க்க போயிற வேண்டியதுதானே?”
“ம்ம்”
“உலகம் ரொம்ப சின்னதாகிடுச்சுடா”
“ம்ம்”
“ரொம்ப யோசிக்காதே, அப்படி அவங்க சம்மதம் சொன்னா அவனுக்கு அதிகமா லீவு எடுக்க முடியாது என்பதால் உடனே திருமண ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கும்”
“புரியுது”
“…”
“அந்த நிலத்தை சம்பூக்கு சீதனமா தந்திடறேன் டா”
“டேய் நீ இப்ப என் கிட்ட அடி வாங்க போற”
“அதெப்படி வரதட்சணை கொடுக்காமல்?”
“வரதட்சணை வாங்கறதும், கொடுக்குறதும் இரண்டுமே குற்றம். இரண்டு பேர் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு மண வாழ்க்கையில் ஈடுபட போறாங்க. இரண்டு பேருமே தனது உழைப்பில நம்பிக்கை வைக்கிறவங்க. அவங்க சம்பாதிச்சு அவங்க வாழ்க்கையை மேல கொண்டு போகட்டும். அதுக்கு ஏன் வரதட்சணை எல்லாம்? அப்படியும் எம் மருமகளை தரப் போற… அதை விடவும் எனக்கு என்ன வேணும் சொல்லு?”
கணேசன் பேச்சற்று இருந்தார்.

