Epi 19_ Manam Virumbudhe unnai unnai_Jansi

தன்னை கிண்டல் செய்கின்றவளை பார்த்து கடுப்பானவனோ,

“ஏ பாப்பு” அவள் காதை திருகினான்.

கதவை திறந்து இருவரும் உள்ளே வரவும், பெற்றவர்கள் பார்வை அவர்கள் இருவரையும் இணைத்து அங்குலம் அங்குலமாக அளந்தது, திருப்தி கொண்டது. ஆனந்திடம் இருந்து தனது காதை விடுவித்து உள்ளே ஓடி வந்தவள் அவன் கை கழுவி அமரவும், அவனுக்கு பறிமாறி தனக்கும் பறிமாறி உண்ண அமர்ந்தாள்.

உண்டு முடிந்ததும் சம்பூர்ணா தனது வேலையில் ஆழ்ந்திருக்க, மகனை முத்துராஜ் தனியே அழைத்துச் சென்று பேசினார். ‘தன்னை இரவு முடிந்த அளவிற்கு வெறுப்பேற்றியவர் தனக்காக எல்லாமும் பேசி விட்டாராமே?’ சந்தேகமாக பார்த்தான்.

“டே மவனே என்னை நம்புடா…நீ வந்து பேசிக்குவன்னு நாங்க இன்னும் பாப்பாக்கிட்ட தான் எதையும் சொல்லலை.” 

“இப்ப என்ன செய்யணும் நான்?” தந்தையிடம் திருதிருவென முழித்தான்.

“என்னை கட்டிக்க சம்மதமான்னு கேளு, சரின்னு சொன்னா அடுத்த முகூர்த்ததில கல்யாணம்”

“ம்ம்”

“ம்ம் என்ன ம்ம்? போ” சொன்னவர் சம்பூர்ணாவை அழைத்தார்.

“என்ன மாமா?”

“போ உன் அறைக்கு அத்தானை அழைச்சுட்டு போ, என்னமோ பேசணுமாம்”

நெற்றிச் சுருங்கினாலும், “வாங்க அத்தான்” என்றவளாக அழைத்துச் சென்றாள்.

“உட்காருங்க அத்தான்”

இருவரும் எதிர் எதிரே அமர அவன் சொல்ல காத்திருந்தாள்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9

error: Content is protected !!