Epi 4_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“நாங்க எல்லாரும் நல்லாதான் பார்த்துக்கிறோம். இருந்தாலும் சட்டுன்னு தாயை இழந்த துக்கம், கூட தகப்பன் நீயும் இல்லைன்னா எப்படி இருக்கும். இரண்டு வீட்டுக்கும் செல்லப் பொண்ணு அவ. இப்படி சின்ன வயசில துன்பப் படுகிறது போல ஆகிருச்சே?” முத்துராஜ் மனம் வெதும்பினார்.

“நான் என் கூட குழந்தைகளை அழைச்சுட்டு போகிறதா இருக்கிறேன் முத்துராஜ்.”

“எப்படிடா கவனிப்ப?”

“எத்தனை பெண்கள் வேலைக்கு போயிட்டு குழந்தைகளையும் கவனிக்கிறதில்லையா? என்னாலையும் முடியும்டா?”

“ம்ம்ம் நிச்சயமா முடியும், உனக்கு எப்ப என்ன உதவி தேவைனாலும் என் கிட்ட கேட்கணும் சரியா?” நண்பர்கள் ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

ஊருக்கு புறப்பட்டு நின்று அழுதுக் கொண்டு இருந்த சம்பூர்ணாவை ஆனந்த் நெருங்கினான்.

“பாப்பூ, அழக்கூடாது என்ன?” தேம்பிக் கொண்டிருந்தவளின் முகத்தை வருடி, தலையை கோதிய அவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். 

தொடரும்

Pages: 1 2 3 4 5 6


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!