Epi 19_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 19_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 19

சம்பூர்ணாவிற்கு அன்றைய தினம் அப்படியாக அமையும் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்தது. முன் தினம் ஊர் சுற்றி வந்து படுத்ததுதான் தெரியும் அத்தனை களைப்பு. இருந்தும் காலையில் எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் மட்டம் போட எண்ணி கண்களை கசக்கிக் கொண்டு பாவ்லா காட்டிய தம்பியை கொஞ்சி, மிரட்டி என்னவெல்லாமோ செய்து பள்ளிக்கு அனுப்பி விட்டிருந்தாள்.

பிரசன்னாவை பள்ளிக்கு வழி அனுப்பிக் கொண்டு இருக்கும் போதுதான் அவள் முன்னறையில் மாமா அப்பாவுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தாள்.

‘மாமா இத்தனை சீக்கிரமாக எழுந்து வந்து இருக்கின்றாரா?’ என மனதிற்குள்ளாக வியப்பெழுந்தாலும் கூட புன்னகைத்தவளாக “மாமா காஃபி கொண்டு வரட்டுமா?” என கேட்க,

“அதென்ன கேட்டுக்கிட்டு? கொண்டு வா” அப்பா சொன்னார். முத்துராஜோ அவரிடம்,

“பொறுடா நான் போய் காஃபி குடிச்சிட்டே வந்துடறேன்” என கணேசனிடம் சொல்லியவராக சம்பூர்ணாவுடன் சமையலறைக்கு சென்றார்.

அவள் காஃபி தயாரிக்க மும்முரமாக பாலை சுட வைக்க முயல,

“காஃபி வேண்டாம் பாப்பா, முதலில் நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு?”

“சொல்லுங்க மாமா” திரும்பி அவர் முகம் பார்த்து நின்றாள்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9

error: Content is protected !!