8. Suvar_Short story_Jansi

சுவர்_ சிறுகதை_ஜான்சி

சுவர்

சிறுகதை

ஜான்சி

அந்த அழகிய கிராமத்தின் அதிகாலை நேரம் இனிய பறவைகளின் கானத்துடன் இனிதே ஆரம்பித்து இருந்தது. அங்கே அந்த ஊருக்கே பெருமையாக கருதப்படும் மாதா கோவிலில் காலை ஆறு மணி *திருப்பலிக்கான முதல் மணி சற்று முன்பு அடித்து ஓய்ந்து இருந்தது. அப்படியெனில் கடிகாரம் பார்க்காமலேயே கூட இப்போது அதிகாலை ஐந்தரை மணி எனக் கொள்ளலாம். அடுத்து, இரண்டாம் மணி ஐந்தே முக்காலுக்கும் மூன்றாவது மணி ஆறுக்கும் என 15 நிமிடங்களுக்கொரு முறையான நினைவூட்டலாக வழக்கமாக அவை ஒலிக்கும். 

கோவிலின் இரண்டாம் மணி ஒலிக்கவும் பெருவாரியான ஊர்த் திரள் கோவிலின் உள்ளே கூடிவிட்டிருந்தனர்.ஆண்களும் பெண்களுமான தனி தனி இருக்கைகளில் அமர்ந்தவர்கள் முழந்தாள் படியிட்டு சிலுவை வரைந்தனர். அவற்றுள் பெண்கள் தத்தம் தலைகளை முக்காடிட்டு மறைத்தனர். பெரும்பாலானவர்கள் தத்தம் கையிலிருந்த *ஜெபமாலையை உருட்ட ஆரம்பித்து இருந்தனர்.

[*திருப்பலி: Mass பாதிரியாரால் இயேசுவின் உடலும், இரத்தமும் பலியாக்கப் படுவதான கத்தோலிக்க திருமறையின் ஒரு வழிபாட்டுமுறை.

**ஜெபமாலை: மக்கள் தனியாகவோ, குழுவாகவோ ஜெபிக்கும் வழிபாட்டுமுறை. பத்துக் கண்ணிகள் கொண்ட ஐந்து இணைப்புகள் கொண்ட மாலையே ஜெபமாலை]

அடுதடுத்த நிமிடங்களில் அவசர அவசரமாக மக்கள் கோவிலை நோக்கி விரைந்தவாறு இருந்தனர். மூன்றாம் மணி அடித்து ஓய்ந்து அடுத்த சில நொடிகளில் திருப்பலியின் துவக்கப் பாடல் பாடற்குழுவினரால் பாடப்பட்டது.

இறைகுலமே எழுவீர்

இறைவனை தொழுதிட வருவீர்

மகிழ்ந்திடும் நாள் இங்கு

இறைமக்கள் யாவரும்

இறைபதம் தொழுதிட விரைந்திடுவோம்.

வருவீர்… வருவீர்

எழுவீர் எழுவீர்

இறைகுலமே எழுவீர்

“தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே…” பாதிரியார் திருப்பலியை ஆரம்பிக்க மக்களும் வழிபாட்டில் இணைந்தனர்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!