ஒரு தவறும் புரியாத தனக்கு இவர்கள் தண்டனை கொடுப்பதா? முடியவே முடியாது. அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது? ஒன்று இறக்கும் வரை போராட வேண்டும் இல்லையென்றால் தானாக தன் முடிவை தேர்ந்துக் கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் கையால் மட்டும் மரணிக்க கூடாது. அது என் பிறப்பிற்கு அழகல்ல என மனதிற்குள் தீர்மானம் எடுத்தாள்.
தன்னைக் குறித்து தெரிந்துக் கொள்ள அவர்கள் என்னவெல்லாம் தகிடுதித்தம் செய்தார்களோ? அம்மா, அப்பா இப்போது என்ன நிலையில் இருக்கிறார்களோ? அவள் மனம் அவர்கள் நலமறிய தத்தளித்தது.
“எவ்வளவு நாள் நமக்கு தண்ணிக் காட்டுனான் இவ அப்பன், ஆனாலும் எப்படி நாம இவளை கண்டு பிடிச்சோம் பார்த்தியா?” மீசையை முறுக்கினான் அரங்கநாதன்.
“இவளை கூறுப் போட்டு அதை இவ அப்பனுக்கு காட்டுனாதான் என் மனசு அடங்கும் ##@@@”, சில கெட்டவார்த்தைகளைச் சொல்லி காரி உமிழ்ந்தான் சந்திரன்.
“ஏய் எழும்பு….எழும்புடி…”
காலால் ரிஷாவை எட்டி உதைத்தவன், ஆங்காரமாய் அவளைப் பிடித்து எழுப்பி அமர வைத்தான்.
புரோகிதரை “ம்ம்..”, எனச் சொல்ல அவர் அவசரமாய் மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தார். வெளியே எதிர்பாராமல் ஏதோ சலசலப்புக் கேட்க ஆரம்பித்தது.
அதில் ரிஷாவின் எதிரில் இருந்த இருவரும் கவனம் திரும்பியதைப் பார்த்தவள் எழுந்து ஓட ஆரம்பித்தாள்.
சேலை ஒருபக்கம் அவள் ஓட்டத்தை நிறுத்த முயல, பளாரென அறைந்து அவளை வீழ்த்தினான் அரங்கநாதன்.
எங்கிருந்தோ வந்த துப்பாக்கியின் குண்டுகள் வீட்டினுள் பாய, சுவரில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் சிலிங்கென தெரித்து விழுந்தன.
தொடரும்


Leave a Reply