Epi 16_Final_Thurathum Nizhalgal_Jansi

“விடுரா, நீ செய்த நன்மைக்கு ரொம்ப நல்லா பிரதி உபகாரம் செஞ்சுட்டாங்க, நன்றி கெட்டவங்க”, அவரை தேற்றினார் கனகவேல்.

“அப்புறம் ரிஷி சார், போலீஸ் விசாரணையில் என்ன தெரிய வந்தது?”

தொண்டையை செருமிக் கொண்டு ரிஷி பேசினான். அவன் மீது மறுபடியும் சண்முகம் & செல்வி பார்வை படிந்து மீண்டது.

“ரொம்ப நாளாகவே அவங்க ரிஷாவை கண்டுபிடிக்க முயற்சி செய்து முடியாமத்தான் இருந்திருக்காங்க சார். அப்பத்தான் சண்முகம் சார் ரிஷாக்கு மாப்பிள்ளை தேடற விஷயம் எப்படியோ தெரிய வந்திருக்கு.”

“ம்ம்…”

“அதனால இன்னொருத்தர் மூலமா இவங்க எதிர்பார்க்கிற எல்லா தகுதிகளும் நிறைஞ்ச பிரபாகர் என்கிற ஒரு போலியான நபரை உருவாக்கி, பார்க்க திருத்தமா இருக்கிற யாரோட போட்டோவையோ அதுக்கு கொடுத்து இருக்கிறாங்க. இங்கே தமிழ் நாட்டு அட்ரஸா இருந்தா பேசி தெரிஞ்சுக்குவாங்கன்னு, மும்பை அட்ரஸ் கொடுத்து குழப்பி இருக்காங்க. போனிலேயே பேசி எல்லாமும் இவங்களும் நிச்சயம் செஞ்சாச்சு…”

உனக்கு அறிவிருக்கா? எனும் கேள்வி தன் நண்பன் ருத்ராவின் பார்வையில் தொக்கி நிற்க, தலை குனிந்தார் சண்முகம்.

“என் மக வாழ்க்கை பத்திரமா இருக்கணும்னு நினைச்சேன்டா, அதுக்கு என் மக கொஞ்சம் தூரமாக இருந்தாலும் பரவாயில்லைன்னு தோணுச்சு, அவங்க பேசினது ரொம்ப டீசெண்டா இருக்கவும் நானும் ஒத்துக்கிட்டேன்.”

ரிஷி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த அந்த நண்பர்களை கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்தான். “அவங்க அப்படி விபரம் பறிமாறிக்கவும் தான் ரிஷாவோட போட்டோ மற்றும் டார்ஜிலிங்க் காலேஜ் போன் நம்பர் எப்படியோ அவங்க கையில கிடைச்சிருக்கு.”

“அவங்க உடனே செயல்படலை, அங்கே ஸ்கூலில் தொடர்புகள் ஏற்படுத்தி இருக்கிறாங்க, வர்ஷானு ஒரு நேப்பாளி பொண்ணு அந்த பொண்ணுக்கு பணம் கொடுத்து ரிஷாவுக்கு ஒரு மாலை கொடுத்து அணியச் சொல்லி இருந்திருக்கிறானுங்க.”

ரிஷா தன்னிச்சையாக தன் கழுத்தை தடவிப் பார்த்தாள். 

“வர்ஷா துரோகி இப்படியாச் செய்வ?, உன்னை நம்பி அந்த மாலையை நானும் கழுத்தில் போட்டிருந்தேனே?” என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். மாலையை எப்போதோ கழற்றி மும்பை போலீஸ் வசம் ஒப்படைத்திருந்தாள்.

“அந்த மாலையில் இவ எங்கே போனாலும் அந்த இடத்தைக் காட்டும் குட்டியான கருவி ஒன்னு இருந்திருக்கு.”

“ஓ…” அனைவரின் குரலும் ஒலிக்க,

“அந்த கருவி உதவியாலத்தான் அவ மும்பைக்கு வர்ற டிரெயின்ல இருக்கிறதை ட்ரேஸ் செஞ்சிருக்காங்க…”

ரிஷாவின் கண்முன் தனக்காக சண்டையிட்டு, நடுக்காட்டில் மறைந்துப் போன ஷாரதா வந்துப் போனார்.

“அப்புறமா பாந்திரா ஸ்டேஷன்ல இவள் அந்த ப்ளாட்பாரத்தில் அரை மணி நேரத்துக்கு அதிகமா இருக்கவும் அதே டிவைஸ் வழியா இடம் கண்டு பிடிச்சு வந்து சுட்டிருக்காங்க”,

“ஓ மை கடவுளே…” இந்தர் முணுமுணுத்தான்.

“அந்த டிவைஸ் குறிப்பிட்ட லொகேஷன் வரைத்தான் காட்டும், எங்கேயாவது அரை மணி நேரத்துக்கு அதிகமா தங்கினா கண்டுபிடிக்க ஈஸி, இல்லைன்னா கஷ்டம் தான்.”

“ஜீஹீ கடற்கரை மற்றும் அந்த பிரபாகரோட அபார்ட்மெண்ட்டுக்கு ரிஷாவும் இந்தரும் போயிருந்தது அந்த மாலை மூலமா அவங்களுக்கு தெரிஞ்சு இருந்திருக்கு. ஆனா என்ன? இவங்க அவங்க கையில அகப்படாம அதுக்கு முன்னாடியே வந்திட்டாங்க.”

“ம்ம் பயங்கர மாலைதான் ரிஷா… உன் கழுத்திலேயே டிவைஸ் வச்சு அவங்களுக்கு திசை காட்டியிருக்க நீ…” இந்தர் சலித்துக் கொண்டான்.

“போடா எனக்கு தெரிஞ்சு வேணும்னா நான் செஞ்சேன்?”, செல்லமாய் கடிந்துக் கொண்டாள்.

ரிஷி தொடர்ந்தான்…”அவங்க ஆளுங்க ரிஷாவை அந்த ரெண்டு இடத்தில தவற விட்டிருந்தாலும், இவங்க ரெண்டு பேரும் என் ஆபீஸ்ல இருந்து போகும் முன்னே இடம் கண்டுபிடிச்சு வந்துட்டாங்க.” 

அந்நேரம் இரவில் அந்த பில்டிங்கில் மற்ற ஆபீஸ்கள் எல்லாம் வெளியே பூட்டி இருக்க, என் ஆபீஸ் மட்டும் உள்ளே பூட்டி இருந்ததும் அதையே க்ளுவா வச்சு, ரிஷா இங்கே தான் இருக்கணும்னு அங்கே காத்திட்டு இருந்திருக்காங்க.

“நான் தான் அஜாக்கிரதையால ரிஷாவை அங்கே இருந்து தப்பிக்க விட்டுட்டேன்.” மனம் வருந்தியவனாக குனிந்து அமர்ந்து இருந்தான் ரிஷி. 

“அப்புறம் என்ன? போலீஸ்கு தகவல் சொல்லி, என்னோட டிவைஸை ரிஷா உடலில் பொருத்தி இருந்ததால் ஈஸியா இடம் கண்டு பிடிச்சு வந்துட்டோம். ரிஷா சேப் (safe), thank god (நன்றி கடவுளே)”

சண்முகமும், செல்வியும் மறுபடி ஒருமுறை தமக்குள் பார்த்துக் கொள்ள ரிஷா அவர்களைப் பார்த்து, தனக்குள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டாள்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!